தேனி சினேகா குளிக்க போனாராம்.. அதென்ன "பால் கேனில்".. பல ஆண் நண்பர்கள் வேற.. கலங்கிய கம்பம்.. ஓ காட்
தேனி: தலைக்கேறிய காமத்தினால், இளம்தாய் செய்த காரியம், தேனியை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் பதற வைத்து வருகிறது.
கம்பம் கிராம சாவடி பகுதியை சேர்ந்தவர் சினேகா... 19 வயதாகிறது.. இவரது கணவர் பெயர் மணிகண்டன்.. கடந்த வருடம்தான் இவர்களுக்கு கல்யாணம் ஆனது.. மணிகண்டன் போடியை சேர்ந்தவர். கூலி வேலை செய்து வருகிறார்.

சினேகா: கர்ப்பிணியாக இருந்த சினோகவிற்கு, சிறப்பாக வளைகாப்பு நடத்தப்பட்டு, பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.. கடந்த மாதம் சினேகாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.. ஆனால், மகளுக்கு பிரசவம் முடிந்ததுமே, சினேகாவின் பெற்றோர் கேரளாவில் தோட்ட வேலைக்கு சென்றுவிட்டதால், கம்பத்தில் உள்ள தன்னுடைய பாட்டி வீட்டில், குழந்தையுடன் வந்து தங்கியிருக்கிறார் சினேகா.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி காலை, பாட்டி கடைக்கு போயிருக்கிறார்.. அப்போது சினேகா குளிப்பதற்காக, குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு, பாத்ரூம் போயிருக்கிறார்.. திரும்பி வந்து பார்த்தபோது, குழந்தையை காணவில்லை.. இதனால், பதறிப்போன சினேகா, குழந்தையை காணாமல் கதறி அழுதார்.. கம்பம் தெற்கு போலீசுக்கு சென்று, குழந்தையை கண்டுபிடித்து தரும்படி புகாரும் தந்தார்.

பால் கேன்: இந்த புகாரின்பேரில் போலீசாரும் அதிரடியில் இறங்கினார்கள்.. மற்றொருபுறம் சினேகாவின் சொந்தக்காரர்களும், குழந்தையை தேட துவங்கினார்கள்.. அப்போது சினேகாவின் வீட்டில், பால் கேனில் குழந்தை மூழ்கியிருப்பதை கண்டு அலறினார்கள். அந்த பால் கேனில், தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தநிலையில், அதற்குள்ளேயே குழந்தையும் மிதந்திருக்கிறது.
பிறகு, உடனடியாக குழந்தையை, கம்பம் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.. ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொன்னார்கள்.. இதையடுத்து, விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார் சினேகா. போலீசார் கேள்வி கேட்க துவங்கியதுமே, உளற ஆரம்பித்தார்.. இதனால் சந்தேகமடைந்த போலீசார், கிடுக்கிப்பிடி விசாரணையை தீவிரப்படுத்தவும், இறுதியில் குழந்தையை கொன்றதை சினேகா ஒப்புக் கொண்டார்.
வலிப்பு நோய்: சினேகாவுக்கு வலிப்பு நோய் இருக்கிறதாம்.. அதனால், குழந்தையை சரியாக கவனிக்க முடியவில்லையாம்.. அதுவும் இல்லாமல், அந்த குழந்தை எப்ப பார்த்தாலும் அழுதுகொண்டே இருந்ததாம்.. அந்த அழுகை சத்தத்தை கேட்டாலே எரிச்சலாக இருந்ததால், கொலை செய்ய துணிந்துவிட்டதாக போலீஸில் வாக்குமூலம் தந்திருக்கிறார்.
இப்போதைக்கு சினேகாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்றாலும், அவரது வாக்குமூலத்தை போலீசார் நம்பவில்லை.. கொலை செய்ததை சினேகா ஒப்புக்கொண்டாலும்கூட, அதற்காக அவர் சொன்ன காரணத்தில் போலீசார் திருப்தியாகவில்லை. அதனால், சினேகாவை சிறையிலிடைத்துவிட்டு, மறுபடியும் இது சம்பந்தமான விசாரணையில் இறங்கினர்.
ஆண் நண்பர்கள்: அந்த பகுதி மக்களிடம் ரகசிய விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான், சினேகாவுக்கு சில ஆண்களுடன் நெருக்கம் உள்ளது உறுதியாகியிருக்கிறது. அந்த ஆண் நண்பர்கள் எல்லாம் யாரென்று தெரியவில்லை. இனிமேல்தான், அவர்களிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள்.
சம்பவத்தன்று சினேகா, தன்னுடைய பாட்டியை கூல்டிரிங்க்ஸ் வாங்கிவரும்படி கடைக்கு அனுப்பி வைத்தாராம்.. அப்போதுதான், குழந்தையை பால் கேனுக்குள் திணித்தே கொன்றுள்ளார்.. குழந்தை இறந்தது உறுதியானதுமே, குளிப்பதற்காக பாத்ரூமிற்கு சென்றுவிட்டார். அதற்கு பிறகுதான், குழந்தையை காணவில்லை என்று, எல்லாருடனும் சேர்ந்து தேடுவது போல டிராமா போட்டுள்ளார்..
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications