ராத்திரியில் கூப்பிட்ட வளர்மதி.. ஆசையாக வந்த ராஜா.. ஒரு நொடியில் எல்லாமே.. அதிர்ச்சி அடைந்த போடி!

கள்ளக்காதலனை வெட்டி கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

தேனி: நைட் வளர்மதி கூப்பிடவும் ஆசை ஆசையாக வீட்டுக்குள் நுழைந்தார் கள்ளக்காதலன் ராஜா.. ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் இப்படி ஒரு காரியத்தை காதலி செய்வார் என்று அவர் ஒரு செகண்ட்கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்!

கேரள மாநிலம் பிஎல் ராம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா.. 30 வயதான இவர் ஒரு கார் டிரைவர்.. கல்யாணமாகி விட்டது.. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார்.

போடியை சேர்ந்த தம்பதி ஜெயராஜ் - வளர்மதி.. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.. வளர்மதிக்கும் 30 வயதாகிறது.. இவரும் கணவரை பிரிந்து வாழ்கிறார்.

கள்ளக்காதல்

கள்ளக்காதல்

இவருக்கு சொந்தமான ஒரு ஏலக்காய் தோட்டம் பிஎல் ராம் கிராமத்தில் உள்ளது.. அதனால்தான் இந்த தோட்டத்துக்கு வளர்மதி அடிக்கடி செல்வார்.. அப்படி செல்லும்போதெல்லாம் ராஜாவின் காரில்தான் செல்வார்.. அந்த சமயங்களில்தான் இருவருக்கும் நெருக்கம் பற்றி கொண்டது... இருவருமே கணவன்-மனைவியை பிரிந்தவர்கள் என்பதால் கள்ளக்காதல் வளர்ந்தபடியே இருந்தது!

சிசிச்சை

சிசிச்சை

இதனிடையே ஒரு நபருடன் ஏற்பட்ட தகராறில் ராஜா படுகாயம் அடைந்தார்... அதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டார்.. இந்த சமயத்தில் வளர்மதி ஆஸ்பத்திரிக்கு சென்று ராஜாவை பார்க்கவில்லை என தெரிகிறது.. இதனால் கள்ளாக்காதலி மீது ராஜாவுக்கு கோபம் வந்தது.. இதைவைத்து வளர்மதியுடன் தகராறு செய்ததுடன், ஏகப்பட்ட செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது.

மிளகாய் பொடி

மிளகாய் பொடி

இதனால்தான் ராஜா கொலை செய்ய வளர்மதி பிளான் செய்திருக்கிறார்.. நேற்று முன்தினம் நைட் ராஜாவை தன் வீட்டுக்கு வளர்மதி அழைத்தார். ஆசை ஆசையாக உள்ளே சென்ற ராஜாவின் முகத்தில், மிளகாய் பொடியை அள்ளி தூவினார் வளர்மதி.. இதில் ராஜா நிலைகுலைந்து போக.. உடனே கையில் வைத்திருந்த அரிவாளால் வளர்மதி ராஜாவை சரமாரியாக வெட்டி தள்ளினார். கொஞ்ச நேரத்தில் அலறி துடித்து ராஜா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

பரிதாப பலி

பரிதாப பலி

அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.. வளர்மதி பக்கத்திலேயே அரிவாளுடன் நின்று கொண்டிருந்தார்.. உடனே ராஜாவை மீட்ட பொதுமக்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.. ஆனால் ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வளர்மதியை கைது செய்தனர்.... கள்ளக்காதலனை பெண் ஒருவர் தன்னந்தனியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் போடி பகுதி மக்களை உறைய வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+