ஊரை சுற்றி கடன் வாங்கி! ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு.. ரூ 53 லட்சத்தை இழந்ததால் போடி இளைஞர் தற்கொலை
தேனி: ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ 53 லட்சம் இழந்த நிலையில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போடி அருகே உள்ள ரங்கநாதபுரம் வ.உ.சி நகரை சேர்ந்தவர் கனகராஜ். இவருடைய மகன் தனவந்தன் (26). இவர் போடியில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார்.

இவருடைய மனைவி பிரியா (23). இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தனவந்தன் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வந்தார். இதற்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆனாலும் அவருக்கு தொடர்ந்து ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் ரூ 53 லட்சம் வரை முதலீடு செய்து அந்த பணத்தை இழந்தார். இந்த நிலையில் பணத்தை கடனாக கொடுத்தவர்கள் எல்லாம் தன்வந்தனிடம் திருப்பி கேட்டனர். ஆனால் அவரால் கொடுக்க முடியவில்லை.
இதனால் தன்வந்தன் மனமுடைந்த நிலையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது தனவந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இரவு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்த போது தனவந்தன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் வர்த்தகத்தில் நம்பி ஏமாந்து வாழ்க்கையை தொலைக்க வேண்டாம் என மத்திய ,மாநில அரசுகள் அறிவுறுத்தி வந்தாலும் பல இளைஞர்கள் இந்த ஆன்லைன் மோகத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications