"காதலியை எரித்த இடத்தில் என்னையும் எரியுங்கள்" - வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த தென்காசி சிறுவன்
தென்காசி: தென்காசியில் காதலியின் மறைவால் விரக்தியடைந்த 16 வயது சிறுவன் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மடத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கபிலன் (16). பத்தாம் வகுப்பு வரை படித்த கபிலன், அதன் பின்னர் படிப்பை நிறுத்திவிட்டார். இதனிடையே, அதே கிராமத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை கபிலன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த சிறுமி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக தெரகிறது. இதனால் சோகத்தில் ஆழ்ந்த சிறுவன் கபிலன், யாருடனும் பேசாமலேயே இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் தனது செல்போனில் கபிலன், ஒரு வீடியோவை எடுத்து வெளியிட்டார். அதில், தனது காதலியின் இறப்பை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை எனக் கூறிய சிறுவன் கபிலன், தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறினார். மேலும், தனது காதலியின் உடல் எரிக்கப்பட்ட இடத்திலேயே தனது உடலையும் எரிக்க வேண்டும் எனவும் அவர் அழுதுகொண்டே கூறினார்.

இந்த வீடியோவை தனது நண்பர்கள் சிலருக்கு கபிலன் அனுப்பி வைத்ததால், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கபிலனை அவரது பெற்றோரும், உறவினர்களும் தேடினர். அப்போது அங்கிருந்த ஒரு மைதானத்தில் உள்ள மரத்தில் கபிலன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பின்னர் அவரது உடலை போலீஸாருக்கு தெரியாமல் எரிக்க அவரது உறவினர்கள் முயன்றதாக தெரிகிறது. ஆனால் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கிடைக்கவே அவர்கள் உடனடியாக அங்கு வந்து கபிலனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இசம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கபிலன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்; அவரை யாரேனும் தற்கொலைக்கு தூண்டினார்களா ஆகிய கோணங்களிலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காதலி இறந்த துக்கத்தில் 16 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டது தென்காசி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications