பள்ளி மாணவன் ஸ்கூல் பேக்கில் அரிவாள்.. மிரண்டு போன ஆசிரியர்கள்.. பதறிய நெல்லை! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டம் தாழையூத்து அரசு உதவிபெறும் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவரின் பையில் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் சோதனை செய்த போது பையில் அரிவாள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். பள்ளி மாணவனின் பையில் அரிவாள் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் தாழையூத்து சங்கர் நகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இரு மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாணவர்களிடம் ஆசிரியர்கள் நடத்திய சோதனையில் ஒரு மாணவனின் புத்தகப் பையில் அரிவாள் இருந்தது தெரிய வந்தது.

tirunelveli nellai school

பள்ளி மாணவனின் பையில் அரிவாள் இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போன ஆசிரியர்கள் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். சக மாணவனுடன் தகராறு ஏற்பட்ட நிலையில், அந்த மாணவன் அரிவாளை எடுத்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய விசாரணைக்குப் பின், அரிவாள் எடுத்து வந்த மாணவன் உட்பட 3 மாணவர்கள் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+