தீர்ப்பு கைக்கு வந்து விட்டது.. பொன்முடி மீண்டும் அமைச்சர் ஆக முடியுமா? சபாநாயகர் அப்பாவு பதில்
நெல்லை: உச்ச நீதிமன்ற தீர்ப்பு என் கைக்கு வந்துவிட்டது. சட்டப்பேரவை முதன்மை செயலாளரிடம் அறிவுரை சொல்லியிருக்கிறேன். அதன்படி பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி வழங்கப்படும் என்று நெல்லையில் இன்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 1 கோடியே 75 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. அப்போது தீர்ப்பு கூறிய நீதிமன்றம், கடந்த 2016 ஆம் ஆண்டு, பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.
சபாநாயகர் அப்பாவு பேட்டி: கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மேல் முறையீடு செய்து இருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் பொன்முடியின் 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் தான் பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி கிடைக்குமா? என்ற விவாதம் எழுந்தது.
இது தொடர்பாக இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டது போல் பொன்முடிக்கும் எம்எல்ஏ பதவி சட்டப்படி கிடைக்கும் என்று கூறினார். சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:- உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அவருக்கு ஒரு வழக்கில் உயர்நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனையை தடை செய்தது.
மீண்டும் எம்எல்ஏ பதவி வழங்க முடியும்: தண்டனை தடை செய்யப்பட்டது. ஒரு தண்டனை தடை செய்யப்பட்டால் உயர் நீதிமன்றமோ.. அல்லது கீழமை மாவட்ட நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்கள், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதிக்கு தண்டனை வழங்குமானால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, 8-ன் படி அவர்கள் வகிக்கின்ற பதவி அந்த தண்டனைக்காலத்தை பொறுத்து அந்த பணியில் இருந்து அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். இப்போது, ஏற்கனவே அதன் அடிப்படையில், உயர்நீதிமன்ற தீர்ப்பு படி தொடர்ந்து பொன்முடி அப்பதவியில் நீடிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த உத்தரவின் படி பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை தொடர முடியாது என்று அறிவிக்கப்பட்டது. இப்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பில், உயர் நீதிமன்ற தீர்ப்பில் வழங்கப்பட்ட தண்டனை தடை செய்யப்பட்டதால் மீண்டும் பொன்முடிக்கு அந்த பதவியை வழங்க முடியும்.
தீர்ப்பு கைக்கு வந்துவிட்டது: அது எவ்வாறு என்றால், வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல், உத்தர பிரதேச காசிப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அன்சாதிப் இவர்களுக்கு எல்லாம் இந்திய அரசமைப்பு சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதுபோல் பொன்முடி விவகாரத்திலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு என் கைக்கு வந்துவிட்டது. நான் சட்டப்பேரவை முதன்மை செயலாளரிடம் அறிவுரை சொல்லியிருக்கிறேன். இதற்கான சட்ட நடவடிக்கைகள் சட்டப்படி எடுத்துக்கொண்டு இருக்கிறோம். விரைவில் செய்தியை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications