செருப்பு, பக்கெட், சேர்களை தூக்கி அடித்த தம்பதி.. திருடர்களுடன் ராத்திரியில் தீரமான போராட்டம்
நெல்லை அருகே கொள்ளையர்களை வயதான தம்பதிகள் விரட்டி அடித்தனர்
Recommended Video
நெல்லை: வீட்டுக்குள் நுழைந்துவிட்ட கொள்ளைக்காரங்களை கண்டு செந்தாமரை பயப்படவே இல்லையே.. செருப்பு, பக்கெட்.. பிளாஸ்டிக் சேர்களை தூக்கி வீசியெறிந்தே அவர்களை துணிச்சலுடன் விரட்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நெல்லை மாவட்டம், கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் பகுதியை சேர்ந்த தம்பதி சண்முகவேல். செந்தாமரை. வயதான இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள். இவர்கள் 3 பேருமே வெளிமாநிலங்களில் வேலை பார்த்து வருகிறார்கள்.
ஒரு ஏக்கரில் அமைந்துள்ள தோட்டத்தில் இவர்களது வீடு கட்டப்பட்டுள்ளது. அதனால் இங்குதான் இந்த தம்பதி வசித்து வருகிறார்கள்.

கொலை முயற்சி
இந்நிலையில், சண்முகவேல் வீட்டில் செல்போனை பார்த்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் 2 கொள்ளையர்கள் வீட்டிற்குள் வந்துவிட்டனர். இருவருமே கர்சீப்பால் முகத்தை கட்டி வந்திருந்தனர். அதில் ஒருவர், திடீரென சண்முகவேல் பின்பக்கமாக வந்து கழுத்தை துணியால் இறுக்கி சுற்றி கொலை செய்த முயற்சித்தார்.

பிளாஸ்டிக் சேர்
அப்போது இன்னொருவர் சண்முகவேல் அருகில் வெட்ட வருகிறார். கழுத்தை இறுக்கியதில் சண்முகவேல் அலறி சத்தம் போடவும், உள்ளிருந்து செந்தாமரை வந்துவிட்டார். இதை பார்த்து பதறிய அவர், கீழே கிடந்த செருப்பு, பிளாஸ்டிக் சேர், பக்கெட் போன்றவற்றை எடுத்து அந்த கொள்ளையர்கள் மீது வீசினார். இன்னும் என்னென்ன கையில் கிடைத்ததோ அதை எல்லாம் எடுத்து அவர்கள் முகத்தில் தூக்கி அடித்து துணிச்சலுடன் விரட்டினார்.

செருப்பு
இதில் பொருட்கள் மேலே விழுந்ததும் நிலைதடுமாறினர் கொள்ளையர். இந்த சமயத்தில் சுதாரித்துக் கொண்ட சண்முகவேலுவும், அவர்களின் பிடியிலிருந்து விலகி வந்து தன் பங்குக்கு சேர்களை தூக்கி அடிக்கிறார். இதை கொஞ்சமும் கொள்ளையர்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால் கொலை செய்யும் முயற்சியை விட்டுவிட்டு, செந்தாமரை அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

சிசிடிவி காட்சி
வயதான இந்த தம்பதிகளின் உயிருக்கு ஆபத்துஏதும் இல்லை.. என்றாலும் இவர்கள் யாரு? கொள்ளைதான் அடிக்க வந்தார்களா? அல்லது கொலை செய்ய வந்தார்களா என்று தெரியவில்லை. விஷயத்தை போலீசில் சொல்லவும், அவர்கள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications