தென்காசியிலிருந்து திமுக தலைமைக்கு குவியும் புகார் கடுதாசிகள்! சர்ச்சையின் பின்னணி என்ன?
தென்காசி: தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் மீதான புகார்களை இந்த முறை சற்று சீரியஸாக விசாரித்து வருகிறது திமுக தலைமை.
எப்போதாவது ஒன்றிரண்டு சர்ச்சையில் சிக்கினால் சரி, எப்போதுமே சிவபத்மநாதன் சர்ச்சையில் சிக்குவதால் தலைமைக்கு இது பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.
குறிப்பாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு தான் இவர் மீதான புகார்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

தென்காசி தெற்கு
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் மீது சங்கரன்கோவிலை சேர்ந்த திமுக இளம் கவுன்சிலர் ஒருவர் அளித்த புகார் தான் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக கோபம் கொள்ளச் செய்துள்ளது. பணம் விவகாரம் தொடர்பான அந்தப் புகாரை உடனடியாக விசாரிக்கத் தொடங்கிய உதயநிதி தரப்பு, சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜாவையும் அழைத்து என்ன நடந்தது என்ற விவரத்தை சேகரித்திருக்கிறது.

சுரண்டை நகராட்சி
இதேபோல் திமுகவுக்கு வெற்றிவாய்ப்புள்ள சுரண்டை நகராட்சியில் காங்கிரஸ் கட்சியுடன் பக்குவமாக பேசி காரியம் சாதிக்காமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது அவசர கதியில் அவர் செயல்பட்டதும் முதல்வர் ஸ்டாலினுக்கு கடும் கோபத்தை கொடுத்திருக்கிறது. இதேபோல் தலைமை அறிவித்த உமாதேவி என்ற வேட்பாளருக்கு போட்டி வேட்பாளராக சுதா மோகன்லாலை நிறுத்தி வெற்றிபெற வைத்த விவகாரமும் ஏற்கனவே அறிவாலயத்திற்கு புகாராக சென்றது.

தொடர் சர்ச்சை
இதேபோல் தனது சொந்த நிதியை வாரி வாரி செலவு செய்து வந்த திமுக முன்னாள் வர்த்தகர் அணி நிர்வாகி அய்யாதுரை பாண்டியன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, என பலரிடமும் இவருக்கு ஏழாம் பொருத்தம் தான். அய்யாதுரை பாண்டியன் இன்று திமுகவிலேயே இல்லை என்பது தனிக்கதை. இதனிடையே தேர்தலின் போது பெண் காவல் ஆய்வாளரிடம் சரிக்கு சரியாக சாலையில் நின்று சண்டை போட்டது என இவர் மீதான சர்ச்சைகளை பட்டியலிடுகிறார்கள் தென்காசி உடன்பிறப்புகள்.

அறிவாலயம் புள்ளி
அறிவாலயம் முக்கிய புள்ளி ஒருவரும், தென் மாவட்டத்தை சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவரும் தான் சிவபத்மநாதனுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பதாக கூறுகிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள். சட்டசபை கூட்டத்தொடர் முடியும் வரை இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பொறுமைக் காப்பார் என்றும் அதற்கு பிறகு சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications