பள்ளி மாணவியை காதல் வலையில் சிக்க வைத்த பாதிரியார் கைது.. ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம்
திருநெல்வேலி: மாணவியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக சிஎஸ்ஐ தேவாலயத்தை சேர்ந்த பயிற்சி பாதிரியார் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் போலீஸ் ஆயுதப்படை மைதானம் பகுதியைச் சேர்ந்த இன்பராஜின் மகன் மில்டன் கனகராஜ் (26). இவர் பாதிரியார் ஆவதற்கான படிப்பை முடித்துக் கொண்டு கேடிசி நகர் சிஎஸ்ஐ ஆலயத்தில் பயிற்சி பாதிரியாளராக உள்ளார்.

இவரது வீட்டுக்கு அருகே வசித்து வந்த ஒரு மாணவி அவ்வப்போது சர்ச்சுக்கு வரும் போது கனகராஜுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென அந்த மாணவியை கனகராஜ் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது.
இதை நம்பிய அந்த சிறுமி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இன்பராஜுடன் பழகி வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து பாதிரியாரின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு இடத்தில் பெண் பார்த்து வந்தனர். இது அந்த மாணவியின் காதுகளை எட்டியது.
இதையடுத்து அந்த மாணவி கனகராஜிடம் சென்று நியாயம் கேட்டுள்ளார். அதற்கு கனகராஜும் அவரது பெற்றோரும் இந்த சிறுமியை அவதூறாக பேசியுள்ளதாக தெரிகிறது. மேலும் கனகராஜின் திருமணத்தில் பிரச்சினை செய்தால் உயிரோடு எரித்துக் கொன்று விடுவதாகவும் மிரட்டினாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தாலுக்கா போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மில்டன் கனகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications