ச்சே.. அந்தம்மாவுக்கு 3 பொண்ணுன்னு தெரியாம போச்சே.. தப்பு பண்ணிட்டேனே.. கதறி அழுத கார்த்திகேயன்
வேலைக்கார பெண்ணை கொன்றிருக்க கூடாது என்றார் கார்த்திகேயன்
Recommended Video
நெல்லை: "அந்த அம்மா கதறினாங்க.. 3 பொண்ணுங்கன்னு எனக்கு தெரியாம போச்சே.. சே.. நான் தான்... தப்பு பண்ணிட்டேன்" என்று உமா மகேஸ்வரி வீட்டு வேலைக்கார பெண்ணை நினைத்து கதறி கதறி அழுகிறாராம் கொலையாளி கார்த்திகேயன்.
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், வேலைக்கார பெண் மாரி என்று 3 பேருமே படு கொலை செய்யப்பட்டனர்.
அரசியல் விரோதம் காரணமாக நடந்த இந்த கொலையில் சீனியம்மாள் மகன் கார்த்திகேயனை போலீசார் கைது செய்து, வாக்குமூலத்தையும் வாங்கி வருகிறார்கள்.

ஒத்த ஆள்
இந்த வாக்குமூலம்தான் தமிழக மக்களுக்கு நிறைய குழப்பங்கள், சந்தேகங்களை தந்து வருகிறது. கார்த்திகேயனை சரியாக புரிந்து கொள்ளவே முடியவில்லை. "நான் ஒத்த ஆள்தான் கொலை செய்தேன், இந்த கொலையை நான் தனியா பண்ணியிருக்க மாட்டேனா என்ன" என்கிறார்.

குளிச்சேன்
பிறகு, "துணியெல்லாம் ஒரே ரத்தக்கறை.. அதான் அவங்க வீட்டிலேயே குளிச்சிட்டு கிளம்பினேன்" என்கிறார். இதையடுத்து, "கொலை செய்றதுக்கு முன்னாடி மஞ்ச பையில ஆப்பிள் வாங்கிட்டு அவங்க வீட்டுக்கு போனேன்" என்கிறார்.

ஏன் கொல்லணும்?
இப்போது இன்னொரு விஷயம் சொல்கிறார்.. இது வேலைக்கார பெண்ணை பற்றியது. "பழி வாங்க 2 பேரை கொலை பண்ணே.. ஆனா அந்த வேலைக்கார பெண் என்ன செய்தார், அவரை ஏன் கொல்லணும்?" என்று போலீசார் கேட்டுள்ளனர்.

மாரியம்மாள்
''நான் தப்பு பண்ணிட்டேன்... அந்த அம்மாவை கொல்லற பிளானே எனக்கு இல்லை... 2 பேர் கொன்னதை மாரியம்மாள் பார்த்துட்டாங்க. போயிடு.. போயிடு..ன்னு சொல்லியும் அந்தம்மா அங்கேயே நின்னுட்டு கத்தினாங்க.. அப்பதான் கத்தியை எடுத்து அவங்களையும் குத்த வேண்டியதா போச்சு.

தப்புதான்
எனக்கு 3 புள்ளைங்க.. என்னை விட்டுடுன்னு அந்த அம்மா கதறுச்சு. ஆனா ஏதோ வேகத்துல அவங்களையும் கொன்னுட்டேன். ஆனா அப்பறமாதான் தெரியுது.. மாரியம்மாளுக்கு மூணுமே பொண்ணுங்களாமே.. சே.. தப்பு பண்ணிட்டேனே.." என்று கதறி அழுதாராம் கார்த்திகேயன்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications