லிங்க்கை க்ளிக் செய்தால் ரூ. 500.. பாஜகவினர் நூதன முறையில் ஏமாற்றுவதாக திமுக பரபர புகார்!
நெல்லை: செல்போனுக்கு அனுப்பப்படும் லிங்க் அழுத்தினால் ரூ. 500 தருவதாகக் கூறி நூதன முறையில் மக்களை பாஜகவினர் ஏமாற்றுவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் திமுக நிர்வாகிகள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை லோக்சபா தொகுதியை பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராபர்ட் புரூஸ், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், அதிமுக சார்பில் ஜான்சி ராணி ஆகியோர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். நெல்லை தொகுதியில் வெல்லப்போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், நெல்லை தொகுதியில் பணப் பட்டுவாடா செய்யப்படுவதாகவும், வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் தர திட்டமிட்டுள்ளதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் செல்போன் ஆப் மூலம் ரூ. 500 தருவதாகச் சொல்லி பாஜக மோசடி வேலையில் இறங்கியுள்ளதாக நெல்லை மாவட்ட திமுகவினர் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.
செல்போன் ஆப் ஒன்றில் லிங்க் அழுத்தினால் ரூ. 500 தருவதாகக் கூறி செல்போன் மூலம் நூதன முறையில் மக்களை பாஜகவினர் ஏமாற்றுவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் திமுக நிர்வாகிகள் இன்று பரபரப்பு புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் பேசுகையில், "செல்போனில் ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்து உள்ளே சென்றால் உங்களுக்கு ரூ. 500 கிடைக்கும் என பொய் சொல்லி ஏமாற்றுகிறார்கள். உள்ளே போனால் தாமரை சின்னம் வருகிறது. அதில் இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்தால் உங்கள் அக்கவுண்டில் இருக்கும் பணம் திருடப்பட்டு விடும். எனவே எச்சரிக்கை செய்யும் வகையில் புகார் அளித்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளனர்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications