பூங்கோதை ஆலடி அருணா மருத்துவனையில் திடீர் அனுமதி.. என்ன நடந்தது.. திமுகவில் பரபரப்பு!
பூங்கோதை ஆலடி அருணா திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
நெல்லை: திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உட்கட்சி பூசல் காரணமாக கடுமையான மனஅழுத்தத்தில் அவர் இருந்ததாகவும், இந்த நிலையில் அவர் உடல் நல பாதிப்பு என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா, முன்னாள் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்தவர்... இவர் திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் இருந்து, 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் ஆலங்குளம் தொகுதியில் இருந்து திரும்பவும் எம்எல்ஏவானார்.. கருணாநிதி மீது அளவுகடந்த பற்றை கொண்டிருந்தவர்.. தற்போதும் திமுகவில் தீவிரமாக சுழன்று வேலை பார்த்து வருபவர்.
இந்நிலையில், பூங்கோதைக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால் அவரை உடனடியாக நெல்லை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.. மருத்துவமனையில் பூங்கோதை சிகிச்சை பெற்று வருவதாகவும், பயப்படும்படி ஒன்றும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சையில் உள்ள அவரது உடல்நிலை சீராக உள்ளது.
அண்மையில் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் விவகாரத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்திருக்கிறார் பூங்கோதை.. குறிப்பாக, நேற்று கடையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பூங்கோதை அவமரியாதை செய்யப்பட்டதாக தெரிகிறது.. சிவ பத்மநாபன், துரை என்ற இரண்டு மாவட்டச் செயலாளர்களும் பூங்கோதைக்கு ரொம்ப ஜூனியர்கள்.. இவர்களுக்கு பொறுப்பு ஒதுக்கப்பட்டதில் இருந்தே உட்கட்சி பூசல் தலைதூக்கி உள்ளது.
இந்த மன அழுத்தம் காரணமாகவே பூங்கோதைக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஒரு தகவல் கூறுகிறது. அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பத்தை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர், சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இப்படி திடீரென கட்சியினரால் மன அழுத்தத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டிருப்பது திமுக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications