அடையாளமே இல்லாத ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும்போது.. எடப்பாடி பழனிசாமிக்கு ஆ.ராசா பதிலடி!
நெல்லை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக எம்.பி ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார்.
கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச்செயாளரும், எம்.பியுமான ஆ.ராசா உரையாற்றினார். அப்போது, எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை விமர்சித்துப் பேசினார்.

ஆ.ராசா பேசுகையில், "முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கருணாநிதியின் பன்முகத்தன்மை என்பது உலகில் எந்த தலைவருக்கும் இதுவரை இல்லை. குறிப்பாக அவர் கொண்டு வந்த திட்டத்தால் தமிழ்நாட்டில் இதுவரை, பயன்பெறாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை கொடுத்த பேனா கருணாநிதியின் பேனா , பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களுக்கு கையெழுத்திட்ட பேனா, மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களுக்கும், பொது மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களுக்கும் கையெழுத்திட்டதால்தான் அவரது நினைவாக பேனா வைக்கின்றோம். இந்தியாவிலேயே முதன் முதலில் கை ரிக்சா இழுத்தவர்களுக்கு சைக்கிள் ரிக்சா கொடுக்க வைத்த பெருமை கருணாநிதியின் பேனாவுக்கு உண்டு.
கலைஞரின் பேனா கையெழுத்திடவில்லை என்றால், பாஜக தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் ஆகி இருக்க மாட்டார் அதேபோல எடப்பாடி பழனிசாமி பி.ஏ படித்திருக்க மாட்டார். எடப்பாடி பழனிசாமி, கருணாநிதிக்கு பேனா சின்னம் ஏன் வைக்க வேண்டும் என்கிறார். கருணாநிதியின் பேனா இல்லை என்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் கிடையாது.
அடையாளம் இல்லாத ஜெயலலிதாவுக்கு ரூ.35 கோடியில் நினைவிடம் வைத்துள்ளார்கள். 100 அடையாளங்களுடன் வாழ்ந்த கருணாநிதிக்கு பேனா சின்னம் வைப்பதற்குக் கேள்வி கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி." என விமர்சித்தார் ஆ.ராசா.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications