பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றியதில் என்ன பெருமை.. எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும்.. கனிமொழி
நெல்லை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை (Pollachi Sexual Assault) வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதை நினைத்து எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக ஆட்சியின் போது பொள்ளாச்சி கொடூரத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகளை காப்பாற்ற எடப்பாடி பழனிசாமி முயன்றதாக கூறிய கனிமொழி, அதிமுக ஒன்றும் தாமாக முன் வந்து விசாரணையை சிபிஐக்கு மாற்றவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு இந்தியாவை உலுக்கியது. மாணவிகள், இளம் பெண்களை துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது, பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஒரு கும்பல் ஈடுபட்டு வந்தது. பல ஆண்டுகளாக நடந்த இந்த கொடூரம், 2019ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது.

பொள்ளாச்சி சம்பவம்
பெண் ஒருவர் கதறிய வீடியோவால் தமிழ்நாடு முழுவதும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, மக்கள் மத்தியில் இந்த பிரச்சனையை மிகப்பெரிய விவாதமாக மாற்றியது. அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை பொதுவெளியில் காவலர் உச்சரித்தது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தீர்ப்பு
இதனால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று போராடினர். இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த சபரிராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு, அவர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கனிமொழி பேட்டி
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது அப்போதைய அதிமுக அரசுதான் என்று கூறி இருந்தார். இதுகுறித்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பொள்ளாச்சி வழக்கில் தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை.
அதிமுக என்ன செய்தது?
ஏனென்றால் பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்றும் அத்தனை முயற்சிகளிலும் அதிமுக ஈடுபட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் அதிமுக நிற்கவில்லை. அதிமுகவில் பொறுப்பில் இருந்தவர்கள் சிலர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு நெருக்கமாகவும் இருந்தனர். அதனால் அவர்கள் மீது வழக்கு கூட பதிவு செய்ய அதிமுக தயாராக இல்லை.
சிபிஐ-க்கு மாற்றியது ஏன்?
அப்படியான சூழலில் யாருக்கும் அதிமுக ஆட்சி மீதோ, எடப்பாடி பழனிசாமி மீதோ நம்பிக்கை இல்லாத காரணத்தால், அவர்கள் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். அதிமுக ஒன்றும் தாமாக சிபிஐ விசாரணைக்கு வழக்கை மாற்றவில்லை. அதிமுக ஆட்சியில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்திருந்தால், சிபிஐ-க்கு மாற்ற வேண்டிய தேவையே வந்திருக்காது.
இபிஎஸ் வெட்கப்பட வேண்டும்
அதனால் சிபிஐ-க்கு விசாரணையை மாற்றியது தனக்கு பெருமை என்று எடப்பாடி பழனிசாமி நினைத்தால், அது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று பதிலடி கொடுத்துள்ளார். கனிமொழியின் கருத்துகளை திமுக மற்றும் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.
-
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications