உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.. 4680 பேருக்கு கிடைத்த வேலைவாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: திமுக மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 44ஆவது பிறந்த நாள் கடந்த நவ. 27ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து 44 நாள் இலவச வேலைவாய்ப்பு முகாம் திருநெல்வேலி மேலப்பாளையத்தில் நடத்தப்பட்டது.

employment camp for 44 days to mark the birthday of Udhayanidhi set a Nobel World Record

தொடர்ந்து 44 நாட்கள் 11 இடங்களில் நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமில் 380 நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 14,600 இளைஞர்கள் பங்கேற்று, அவர்களில் 4680 பேருக்கு இலவச வேலைவாய்ப்பு கிடைத்தது.

10 வகுப்பு முதல் டிப்ளமோ, டிகிரி, பொறியியல், மருத்துவம், கலை & அறிவியல், கணிதவியல், வணிகவியல் என 36 வகையான பாடப்பிரிவுகளில் படித்த மாணவர்கள் இதில் பங்கேற்றனர். அவர்களை SKILLED / SEMI SKILLED / UNSKILLED என மூன்று தளமாகப் பிரித்து தொழிற்சாலைகள் / பல்துறை நிறுவனங்கள் / மென்பொருள் நிறுவனங்கள் / பொறியியல் நிறுவனங்கள் என 9 வகையான நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

employment camp for 44 days to mark the birthday of Udhayanidhi set a Nobel World Record

கடந்த அக். 24 திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வு, கடந்த டிச. 6இல் நிறைவடைந்தது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு தொடர்ந்து 44 நாட்கள் நடத்தப்பட்ட இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நோபல் உலக சாதனையைப் படைத்துள்ளது.

இந்த சாதனைக்கான சான்றிதழ் மற்றும் கேடயத்தைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் உலக சாதனை அமைப்பினர் வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் மற்றும் அகில இந்திய மாணவர் சம்மேளன தேசிய பொது செயலாளரான துரை.சக்தி சீதா விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

employment camp for 44 days to mark the birthday of Udhayanidhi set a Nobel World Record
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+