மின்னல் வேகத்தில்.. நேருக்கு நேர் மோதல்.. உட்கார்ந்த நிலையிலேயே பலியான தந்தை, மகள்
நெல்லை: லாரியும், காரும் பயங்கரமாக மோதிக் கொண்டதில், உட்கார்ந்த நிலையிலேயே.. அதிகாரியும், அவரது மகளும் காரில் நசுங்கி உயிரிழந்தனர்!
நெல்லை மாவட்டம் கீழக் கடையத்தை சேர்ந்தவர் மில்டன் ஜெயக்குமார். தீயணைப்புத்துறையில் நிலைய அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ரிடையர் ஆனநிலையில், கடையத்தில் ஒரு ஜவுளிக்கடையை திறக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தார். அதற்கான முயற்சிகளிலும் இறங்கி வந்தார். ஜவுளி ஆர்டர் தருவதற்காக சேலம் செல்ல வேண்டி இருந்தது. இதற்காக தன்னுடைய மகள், ரெனிலா ரோஸை அழைத்து கொண்டு காரில் சேலம் சென்றார். ரெனிலாவுக்கு வயசு 26!
தேவையான ஜவுளியை வாங்கி கொண்டு நேற்று ஊருக்கு தந்தையும், மகளும் வந்து கொண்டிருந்தனர். காரை அப்பாதான் ஓட்டி வந்தார். அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு தோட்டக்கலை பண்ணை அருகே கார் சென்றபோது, எதிரே ஒரு லாரி வேகமாக வந்தது.
எதிர்பாராதவிதமாக கார் மீது நேருக்கு நேராக பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. காரில் இருந்த தந்தை-மகள் உட்கார்ந்த நிலையிலேயே உடல் நசுங்கி உயிரிழந்து விட்டனர். இதில் லாரி டிரைவர் ஜெராசுதீன், காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு, தந்தை, மகள் சடலங்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications