Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்.. ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி கடலில் கலக்கும் 5000 கன அடி நீர்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்த நிலையில், தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி 5000 கன அடி தண்ணீர் வெளியேறி கடலுக்குச் செல்கிறது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடையம் பகுதியில் உள்ள கடனா நதி அணையில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக, அணையில் இருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Nellai thamirabarani water

நெல்லை மாநகர் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற குறுக்குத்துறை முருகன் கோவிலிலை தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஆற்றின் இரு கரைகளையும் தண்ணீர் தொட்டுச் செல்கிறது. இந்த நிலையில், ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் அணையில் இருந்து பிரியும் மேலக்கால் வாய்க்காலில் இருந்து வினாடிக்கு 1030 கன அடி தண்ணீரும் கீழக்கால் வாய்க்காலில் இருந்து வினாடிக்கு 333 கன அடி தண்ணீரும் திறந்துவிடப் பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அணை வடகால் வாய்க்காலில் இருந்து வினாடிக்கு 1093 கன அடி தண்ணீரும் தென்கால் வாய்க்காலில் இருந்து வினாடிக்கு 1230 கன அடி தண்ணீரும் வறட்சியான பகுதியான சாத்தான்குளம் பகுதிக்கு தண்ணீர் செல்லும் சடையனேரி கால்வாயில் இருந்து வினாடிக்கு 400 கன அடித் தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மணல் மேடாகி தூர்ந்து போன நிலையில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி வினாடிக்கு 5440 கன அடி தண்ணீர் வெளியேறி கடலுக்குச் செல்கிறது. கனமழை நேரத்தில் சரிவர நீரை தேக்கி வைக்க முடியாமல் 5000 கன அடி நீர் கடலில் சென்று கலந்து வருவது பொதுமக்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+