இது மணிப்பூர் அரசு இல்லை! சட்டம் ஒழுங்கு விஷயத்தில் பாஜகவை சீண்டிய சபாநாயகர் அப்பாவு! பரபர ‛அட்டாக்’
திருநெல்வேலி: சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்பட்டால் மணிப்பூர் மாநிலத்தை போல் நாங்கள் ஒன்றும் வேடிக்கை பார்க்க மாட்டோம். ஏனென்றால் இது தமிழக அரசு என உறுதியாக தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அரசு மேல்நிலை பள்ளியில் வேதியியல், விலங்கியல், இயற்பியல், தாவரவியல் என நான்கு பிரிவுகளைக் கொண்ட ஆய்வகங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. இன்று காலை எதிர்பாராத விதமாக விலங்கியல் ஆய்வகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இந்த வேளையில் அங்குள்ள மைதானத்தில் சிலர் விளையாடி கொண்டிருந்தனர். ஆய்வகத்தில் பிடித்த தீயை பார்த்த அவர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர்.
இருப்பினும் ஆய்வகத்தில் இருந்த பல பொருட்கள் எரிந்து போயின. இதைத்தொடர்ந்து தீக்கிரையான ஆய்வக
கட்டடத்தை சட்டசபை சபாநாயகர் அப்பாவு, கல்வித்துறை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அவர் கேட்டறிந்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:
பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு தமிழகத்தில் இருந்தால் இரும்பு கரம் கொண்டு இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். பிற மாநிலங்களை போன்று வேடிக்கை பார்க்காமல் உடனடியாக கட்டுப்படுத்தப்படும். தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் கடுமையாக தாக்கப்படுகிறார்கள் என பொய்யான வீடியோவை வெளியிட்டவரை 48 மணி நேரத்தில் தமிழ்நாடு அரசு கைது செய்தது.
எனவே சட்டத்தின் ஆட்சியின்படி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க யாரேனும் முயற்சி செய்தால் அரசு அதனை அனுமதிக்காது. மணிப்பூரைப் போல அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது'' என்றார். மணிப்பூரில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. குக்கி-மைத்தேயி மக்கள் இடையேயான பிரச்சனை என்பது கடந்த மே மாதம் 3ம் தேதி வன்முறையானது.
தற்போது 3 மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் வன்முறை ஆங்காங்கே நடந்து வருகிறது. வன்முறை முற்றிலுமாக கட்டுக்குள் வரவில்லை. இதனை கட்டுப்படுத்த மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தை ஆட்சி செய்யும் பாஜக முதல்வர் பீரன் சிங் தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கைகள் கைக்கொடுக்கவில்லை. இத்தகைய சூழலில் தான் அப்பாவு இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் நடிகர் தனுஷ்? மறுக்காத தந்தை கஸ்தூரி ராஜா.. கவனம்பெற்ற பதில்












Click it and Unblock the Notifications