நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி அதிகாலையில் திடீரென உயிரிழந்தது.. பக்தர்கள் அதிர்ச்சி!
திருநெல்வேலி: நெல்லையப்பர் திருக்கோயில் யானை காந்திமதிக்கு கடந்த இரு நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், கால்நடை மருத்துவர்களின் சிகிச்சை பலனில்லாமல் காந்திமதி யானை உயிரிழந்துள்ளது. 56 வயதான காந்திமதிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மூட்டு வலி உட்பட சில உடல்நிலை பிரச்சினைகள் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில். ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த நெல்லையப்பர் கோயிலுக்குப் பக்தர்கள் வருவார்கள்.

நெல்லையப்பர் யானை:
இந்த கோயிலில் காந்திமதி என்ற யானை பக்தர்களை ஆசீர்வதித்து வந்தது. கம்பீரமாக நின்று பக்தர்களை வரவேற்று வந்த இந்த யானைக்கு கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பிரச்சினைகள் இருந்து வந்தது. 56 வயதாகும் இந்த யானைக்கு வயது முதிர்வு காரணமாக மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தது. இதற்காகச் சிறப்புச் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது.
5 ஆண்டுகளுக்கு மேலாகவே மூட்டு வலி பிரச்சினை இருந்த சூழலில், கடந்த ஒரு மாதமாக வலி அதிகரித்துள்ளது. இதனால் கால்நடை மருத்துவர்கள் காந்திமதி யானைக்குத் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் படுக்காமல் நின்றவாறே தூங்கி, காந்திமதி தினசரி பணிகளை மேற்கொண்டு வந்தது. இதற்கிடையே நேற்று அதிகாலை படுத்துத் தூங்கிய காந்திமதியால் அதன் பிறகு மீண்டும் எழ முடியவில்லை.
உயிரிழப்பு
காந்திமதி யானை மரணமடைந்ததை அடுத்து நெல்லையப்பர் கோயில் நடை சாத்தப்பட்டது.. யானைக்கு இறுதிச் சடங்குகள் முடிந்ததும் கோயில் நடை திறக்கப்படும் என நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
56 வயதான காந்திமதி யானை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.. இந்த காந்திமதி யானை கடந்த 1985ஆம் ஆண்டு கோயிலுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. நயினார் பிள்ளை என்பவர் இந்த யானையை நன்கொடையாக அளித்தது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications