மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை நிர்வாகியாக ஏபிவிபி தலைவர் நியமனம்! மாணவர்கள் போராட்டம்
திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் நிர்வாக உறுப்பினராக ஆர்எஸ்எஸ் ஆதரவு அமைப்பான ஏபிவிபியின் தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என கல்வி நிலையங்களில் வலதுசாரி தலைவர்கள் நிர்வாகிகளாக நியமிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சமீபத்தில் சென்னையில் உள்ள அரசு பள்ளியில் ஆன்மீக பேச்சாளர் என்று தன்னை கூறிக்கொண்டு, மாற்றுத்திறனாளிகள் குறித்து மூடநம்பிக்கையாக மகாவிஷ்ணு எனும் இளைஞர் பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இவரது பேச்சை தடுக்க முயன்ற பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் மகாவிஷ்ணு மிரட்டும் தொனியில் பேசியிருந்தார்.

இவர் வலதுசாரி, இந்துத்துவா கொள்கையை கொண்டவர் என்றும், அவரை அனுமதிக்க பள்ளி நிர்வாகத்திலும், வலதுசாரி நிர்வாகிகள் இருந்ததுதான் காரணம் எனவும் சொல்லப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.
இந்த பஞ்சாயத்தை தொடர்ந்து, கல்வி நிலையங்களில் இந்துத்துவா கருத்தியலை கொண்டிருக்கும் ஆட்களை நிர்வாகிகளாக நியமிப்பதற்கு எதிர்ப்பு வலுத்தது. ஆசிரியர்களா, பேராசிரியர்களாக, பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் என்கிற போர்வையில் இவர்கள் மாணவர்களை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று திக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இப்படி இருக்கையில் தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், ஏபிவிபி அமைப்பின் தலைவர் ஒருவர் நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏபிவிபி என்று அழைக்கப்படும் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பானது, கடந்த 1948ம் ஆண்டு யஷ்வந்த் ராவ் கேல்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர் தீவிர ஆர்எஸ்எஸ்காரராவார். பாஜகவுடன் கொள்கை முரண் கொண்டுள்ள திமுக, தனது ஆட்சியின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகத்தில் எப்படி ஆர்எஸ்எஸ் ஆதரவு அமைப்பான ஏபிவிபியின் தலைவரை, பல்கலையின் நிர்வாகியாக நியமிக்கலாம்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.
தற்போது பல்கலைக்கழகத்தின் சின்டிகேட் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள சவீதா ராஜேஷ், ஏபிவிபியின் தென் தமிழகத் தலைவராக இருக்கிறார். இந்த நியமனம் ஆளுநரால் பரிந்துரைக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இதற்கு இடதுசாரி மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ (SFI) கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது.

-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications