''திமுகவுக்கு உயிர் கொடுத்த இஸ்லாமிய சமூகம்''! இப்தார் விழாவில் சபாநாயகர் அப்பாவு நெகிழ்ச்சி!
நெல்லை: திமுக உயிரோட்டமாக இருக்கிறது என்றால் அதற்கு உயிர் கொடுத்த சமூகம் இஸ்லாமிய சமூகம் என சபாநாயகர் அப்பாவு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தற்போது ரமலான் மாதம் நடைபெற்று வருவதால் திரும்பிய பக்கமெல்லாம் இப்தார் விழாக்கள் களைக்கட்டி வருகின்றன.

அந்த வகையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு இதனைக் கூறினார்.
இஸ்லாமியர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்திருப்பதாகவும் இந்த அரசு இஸ்லாமியர்களுக்கான அரசு என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இஸ்லாமிய சமூக மக்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கக் கூடிய அரசு தான் இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், பிறருக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்பதை முஸ்லீம் சமுதாயத்தை பார்த்து தான் தெரிந்துகொள்ள வேண்டும் என புகழாரம் சூடினார்.
குறிப்பாக கொரோனா காலத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில் இஸ்லாமிய இளைஞர்கள் ஏராளமானோர் தன்னார்வமாக மனிதாபிமானத்துடன் பங்கேற்றதை சுட்டிக்காட்டி அதற்காக பாராட்டினார்.

இஸ்லாமிய சமுதாயத்தினரின் கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார் என்றும் இன்னும் என்னென்ன கோரிக்கைகள் உள்ளனவோ அவைகளையும் முதல்வர் நிறைவேற்றுவார் என உறுதியளித்தார்.
நோன்பு திறப்பதற்கு முன்னர் நடைபெற்ற சிறப்பு துஆவில் தலையில் தொப்பி அணிந்து கலந்துகொண்ட அவர், துஆ ஓதும் போது இரு கைகளையும் ஏந்தி ஆமின் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications