கவின் ஆணவக்கொலை வழக்கு: நீதிமன்றத்திற்கு வரும்போது முகத்தை மூடி அழுத கொலையாளி சுர்ஜித்!
நெல்லை: நெல்லையில் கவின் ஆணவக்கொலை வழக்கில் கைதான சுர்ஜித் இன்று அழுதுகொண்டே நீதிமன்றத்திற்கு வந்தார். சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய சிபிசிஐடி போலீசாரின் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ், கடந்த ஜூலை 27 ஆம் தேதி நெல்லை கேடிசி நகரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்தனர். அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

சுர்ஜித்தின் பெற்றோர்களான தமிழ்நாடு சிறப்பு காவல்படை உதவி ஆய்வாளர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காவல் உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் பெற்றோருக்கு இந்த கொலையில் சம்மதம் இருப்பதாக புகார் தெரிவித்த கவினின் பெற்றோர், அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை உடலைப் பெற மாட்டோம் எனப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பின்னர் சரவணன் கைது செய்யப்பட்டார். அதன் பிறகே கவின் உடலை அவரது பெற்றோர் பெற்று தகனம் செய்தனர். கவின் கொலை வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. நேற்று சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. கவின் கொலை செய்யப்பட்ட நாளில் சம்பவ இடத்திற்கு சென்ற பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டு வெயிலாச்சி ஆகியோரிடம் சிபிசிஐடி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் உலக ராணி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ் நெல்லை இரண்டாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க சுர்ஜித் மற்றும் சரவணன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வருகின்ற 11 ஆம் தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி ஹேமா உத்தரவிட்டார்.
முன்னதாக கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அப்போது நீதிமன்றத்தில் கொலையாளி சுர்ஜித் முகத்தை துணியால் மூடியபடி அழுது கொண்டே வந்தார். விசாரணைக்குப் பிறகு சுர்ஜித் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications