Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்கள் திருமணத்திற்கு உதவியாக இருந்தது..தாலிக்கு தங்கம் திட்டம் தொடர வேண்டும்.. நயினார் நாகேந்திரன்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது வருத்தத்துக்குரியது என்று பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர் கல்வியான பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.

பாஜக மரியாதை

பாஜக மரியாதை

இந்த திட்டத்திற்கு புதுமைப் பெண் திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டு, இன்று தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில் வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தமிழக அரசிடம் கோரிக்கை

தமிழக அரசிடம் கோரிக்கை

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து நயினார் நாகேந்திரன் கூறுகையில், வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தை புணரமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. வ.உ.சி. இல்லம் தொடர்பான கோரிக்கைகள் முதல்வர் மு.க.ஸ்டானிடம் வைக்கப்படும். விரைவில் முதல்வரை நேரில் சந்தித்து இதனை வலியுறுத்துவேன் என்று தெரிவித்தார்.

தாலிக்கு தங்கம் திட்டம்

தாலிக்கு தங்கம் திட்டம்

இதன்பின்னர் தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தாலிக்கு தங்கம் திட்டம் அனைத்து பெண்களின் வாழ்க்கையில் முக்கியமான திட்டமாக இருந்தது. அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம் அனைத்து பெண்களின் திருமணத்திற்கும் உதவியாக இருந்தது.

இந்தத் திட்டத்தை மாற்றியமைத்தது மிகவும் வருத்தத்துக்குரியது. மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டத்தை கண்டிப்பாக தொடர வேண்டும் என பாஜக சார்பில் வலியுறுத்தப்படும் என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் வருத்தம் தரக்கூடிய செயல்.

பாஜக வெற்றிபெறும்

பாஜக வெற்றிபெறும்


ஆனால் எதிர்பக்கம் இருந்து வரக்கூடிய கருத்துக்கு பதில் சொல்லும் சூழல் ஏற்படுகிறது. அதனை யார் உருவாக்குகிறார்கள் என்பது தான் முக்கியம் என்று தெரிவித்தார். மேலும், யார் எந்த கூட்டணி வைத்தாலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+