கிளாஸ் ரூமிலேயே.. சிறுமி காலை சுற்றிக்கொண்ட "நாகராஜன்".. நீலநிறத்துக்கு மாறிய ஷகாலாவை ஞாபகம் இருக்கா
கிளாஸ் ரூமிலேயே விஷப்பாம்பு ஒன்று சிறுமியின் காலை சுற்றிக் கொண்டுள்ளது
திருவனந்தபுரம்: ஸ்கூலுக்கு ஓடோடி வந்த 4ம் வகுப்பு மாணவியின் காலை, விஷப்பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டுவிட்டது..!
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் மங்கரையை சேர்ந்தவர் சந்தோஷ்.. இவரது மகள் ஆஸ்ரயா... அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளிக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், லீவு முடிந்து நேற்று காலை, பள்ளிக்கு வந்தாள் ஆஸ்ரயா.. அப்போது மணி 9:30 இருக்கும்.

விஷப்பாம்பு
கிளாஸ்ரூமில் நுழைந்தவுடனேயே, அங்கு படுத்திருந்த பாம்பை தெரியாமல் மிதித்துவிட்டாள் சிறுமி.. அது ஒரு விஷப்பாம்பு.. காலால் மிதித்ததுமே, அந்த பாம்பு சிறுமியின் காலை மொத்தமாக சுற்றிக்கொண்டுவிட்டது.. இதனால், பயந்துபோய் கதறி துடித்தாள் சிறுமி.. காலை உதறினால், எங்கே பாம்பு கடித்துவிடுமோ என்று பயந்து அப்படியே சில நிமிஷங்கள் நின்றிருக்கிறாள்.. பிறகு, வேகமாக காலை உதறிவிட்டு ஓடினாள்.. அதற்குள் ஆஸ்ரயாவின் சத்தத்தை கேட்டு மற்ற கிளாஸ் ரூமில் இருந்தவர்கள் ஓடிவந்து அந்த பாம்பை அடித்து கொன்றனர்.

கிளாஸ் ரூம்
காலை அவ்வளவு நேரம் பாம்பு சுற்றியிருந்ததால், ஆஸ்ரயாவை பாம்பு கடித்திருக்கும் என்ற சந்தேகத்தில், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு ஆசிரியர்கள் அழைத்து சென்றனர்... ஆனால், பாம்பு கடிக்கவில்லை என்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர்... இருந்தாலும், 24 மணி நேர கண்காணிப்பில் மாணவியை வைத்துள்ளனர்... அந்த பள்ளி வளாகம் முழுவதும் புதர்மண்டி கிடக்கிறதாம்.. விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது.. இதனால், சம்பந்தப்பட்ட பள்ளி முன்பு, பெற்றோர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...

ஷகாலா
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து கலைந்துசென்றனர்... இந்த நேரத்தில் இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது.. இப்படித்தான் 3 வருடம் முன்பு இதே கேரளாவில் நடந்த ஒரு துயர சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது.. கோழிக்கோடு அருகே சுல்தான்பத்தேரியை சேர்ந்த வக்கீஸ் அப்துல் அஜிஸ் என்பவரது 10 வயது மகள் ஷகாலா ஷெரின்.. வயநாடு அருகே ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.

கிளாஸ் ரூம்
சம்பவத்தன்று வழக்கம்போல் கிளாசில் உட்கார்ந்திருந்தாள் ஷகாலா.. அப்போது, மதியம் 3 மணி இருக்கும்.. கிளாஸ் ரூம் சுவற்றில் ஒரு ஓட்டை இருந்திருக்கிறது.. அந்த ஓட்டைக்குள் விளையாட்டாக தனது காலை விட்டாள் ஷாகாலா.. அப்போதே ஏதோ நறுக்கென கடிக்கவும், காலை உடனே வெளியே எடுத்துவிட்டாள். ஆனால் காலில் அந்த இடத்தில் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.. இதை தன் வகுப்பு தோழிகளிடம் ஷகாலா காட்டவும், அதற்குள் டீச்சர் அங்கு வந்துவிட்டார்.

ஷகாலா மரணம்
ஷகாலாவின் காலில் பாம்பு போல கடித்ததற்கான அடையாளம் தெரிந்ததுமே, உடனே பெற்றோருக்கு போன் செய்து விஷயத்தை சொல்லிவிட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் ஷகாலா பரிதாபமாக இறந்துவிட்டாள்... அப்போது அவளது உடம்பு நீலகலரில் மாறியிருந்தது.. ஷகாலாவின் இந்த மரணம் கோழிக்கோட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.. அந்த பள்ளியிலும், புதர்கள் மண்டி கிடந்து பாம்புகள் நடமாடி இருந்த நிலையில், இன்று மீண்டும் அதுபோலவே ஒரு சம்பவம் நடந்துள்ளது, கேரளாவை உலுக்கி உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications