திருநெல்வேலியில் கணவரின் அடிவயிற்றுக்கு கீழ்.. வேட்டியை கழற்றி கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், முத்துலட்சுமி தம்பதிக்கு வாழ்க்கையில் சந்தேகத்தால் நடக்கக்கூடாது விஷயங்கள் நடந்திருக்கிறது. மூன்று மகள்கள், ஒரு மகன் என அழகாக வாழ்ந்த குடும்பத்தை சந்தேகம் என்ன செய்திருக்கிறது தெரியுமா? கணவர் மீதே கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியிருக்கிறார் மனைவி.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

திருநெல்வேலி அருகே கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனியை சேர்ந்த 42 வயதாகும் பாலசுப்பிரமணியன் என்பவர் ஆட்டோ டிரைவரான இவருக்கு 34 வயதாகும் முத்துலட்சுமி என்ற மனைவியும், 3 மகள்கள், ஒரு மகனும் இருக்கிறார்கள். கணவன்-மனைவி இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 25 நாட்களுக்கு முன்பு முத்துலட்சுமி கணவரிடம் தகராறு செய்து விட்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.

Tirunelveli Wife pours boiling oil on husband What is the reason

இந்த விவகாரம் தொடர்பாக திருநெல்வேலியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் 2 பேரையும் அழைத்து விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் முத்துலட்சுமி கடந்த 4 நாட்களுக்கு முன் கணவர் வீட்டிற்கு சென்றுவிட்டாராம்.

நேற்று காலை வீட்டில் பாலசுப்பிரமணியன் தூங்கிக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது முத்துலட்சுமி தனது கணவர் மீது தண்ணீரை ஊற்றி எழுப்பினாராம். இதில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது முத்துலட்சுமி தான் ஏற்கனவே கொதிக்க வைத்து இருந்த எண்ணெய்யை பாலசுப்பிரமணியனின் வேட்டியை அவிழ்ந்து வயிற்று பகுதிக்கு கீேழ ஊற்றியதாக சொல்லப்படுகிறது.. இதில் வயிற்று பகுதியில் இருந்து கால் வரை அவரது உடல் வெந்தது. வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்திருக்கிறார்.

படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், பாலசுப்பிரமணியனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக முத்துலட்சுமி சந்தேகமடைந்தார்.

இதுதொடர்பாகவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்ததாம் நேற்றும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் முத்துலட்சுமி கொதிக்கும் எண்ணெய்யை தனது கணவர் மீது ஊற்றியது விசாரணையில் தெரியவந்தது.இன்ஸ்பெக்டர் சுதா வழக்குப்பதிந்து முத்துலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+