சென்னையை போன்று.. தென்மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி உறுதி.. குட் நியூஸ் சொன்ன அமைச்சர் தங்கம்!
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிப்காட் மற்றும் எல்காட் பகுதிகளில் தொழிற்சாலைகளை நடத்தி வருபவர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இதில் சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்கள்.

இதன்பின்னர் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:- . தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை தென்மாவட்டங்களில் நடத்த முதல்வரோடு ஆலோசனை நடத்தி ஏற்பாடு செய்யப்படும். நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தை முன்னிலைப்படுத்தி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
புதிய தொழில் தொடங்குவதற்காக அமைக்கப்பட்ட ஒற்றைச் சாளர முறை இதுவரை இருந்தது. இனிமேல் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் 2020-21 ஆண்டு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் முதல் கூட்டுறவு நூற்பாலையான நெல்லை பேட்டையில் உள்ள கூட்டுறவு நூற்பாலை கூட்டுறவு சங்கத்தின் கையில் உள்ளது. விரைவில் அங்கு ஆய்வு செய்து மாற்று தொழில் ஏற்பாடுகள் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தடுப்பூசியை தமிழகமே தயாரிக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் எண்ணம். செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்கான அனுமதியை வழங்கவேண்டியது மத்திய அரசின் கையில் உள்ளது என்று தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications