பல் பிடுங்கிய பல்வீர் சிங்? இன்று வேலையை தொடங்கும் ஐஏஎஸ் அமுதா.. புகாரளிக்க ரெடியா-அழைக்கும் ஆட்சியர்
திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நாளை முதல் அது தொடர்பான விசாரணை தொடங்க இருக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ள ஐஏஎஸ் அமுதா இன்று பாதிக்கப்பட்டவர்களிடம் நேரில் விசாரணை மேற்கொள்ள இருக்கிறார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் போலீசாரால் பிடுங்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது தொடர்பாக நாளை முதல் விசாரணை தொடங்குகிறது. வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை காலை 10 மணி முதல் முதல் சிறப்பு அதிகாரி அமுதா விசாரணை நடத்த உள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள், இதுவரை புகார் அளிக்காதவர்கள், கூடுதல் தகவல் அளிக்க விரும்புபவர்கள் நாளை சிறப்பு அதிகாரி முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார். நேரில் சந்தித்து புகார் தெரிவிக்க முடியாவிட்டால் [email protected] என்ற ஈமெயில் முகவரிக்கு புகார் அனுப்பலாம் என்றும், 8248887233 ஆகிய எண்ணிலும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அறிவித்து இருக்கிறார்.
தமிழ்நாடு அரசு நடவடிக்கை: முன்னதாக இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு அதிகாரி ஐ.ஏ.எஸ். அமுதாவை நியமித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது, "திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய குற்ற எண்.69/2023 என்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கிய திரு.பல்வீர் சிங், இ.கா.ப.. அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினர் துன்புறுத்தியதாக சமூக ஊடகங்களில் வெளியான புகார்கள் தொடர்பாக காவல் நிலை ஆணை 151-இன்கீழ் சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர் / சார் ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள 26.03.2023 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரால் உத்தரவிடப்பட்டது.
பணியிட மாற்றம்: மேலும், இந்நிகழ்வில், பல்வீர்சிங், இ.கா.ப., அவர்கள் 29.03.2023 பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அம்பாசமுத்திரம் காவல் அன்று உட்கோட்டத்தில் பணியாற்றி வந்த திரு. ராஜ்குமார், முதல்நிலைக் காவலர், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையம், திரு.போகபூமன், காவலர், வி.கே.புரம் காவல்நிலையம், திரு.சந்திரசேகரன், காவல் ஆய்வாளர், அம்பாசமுத்திரம் காவல் நிலையம், திருமதி பி.ராஜகுமாரி, கல்லிடைக்குறிச்சி வட்டக் காவல் ஆய்வாளர், திரு. ஏ.பெருமாள், வி.கே.புரம் வட்டக் காவல் ஆய்வாளர், திரு.என்.சக்தி நடராஜன், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட சார்-ஆய்வாளர், திரு.எம்.சந்தானகுமார், தலைமைக் காவலர், அம்பாசமுத்திரம் காவல் நிலையம், திரு.வி.மணிகண்டன், முதல்நிலை காவலர், அம்பாசமுத்திரம் காவல் நிலையம் ஆகியோர் மேற்படி புகார்கள் தொடர்பாக, ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை அறிக்கை: திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரின் 26.03.2023ஆம் நாளிட்ட உத்தரவிற்கிணங்க, சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர் / சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு, தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு 03.04.2023 அன்று சமர்ப்பித்துள்ளார். அம்பாசமுத்திரம் சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர் / சார் ஆட்சியரின் முதற்கட்ட விசாரணை அறிக்கை மற்றும் காவல் உட்கோட்டத்தில் அமைந்துள்ள வேறு காவல் நிலையங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாக புகார்கள் வரப்பெற்றுள்ளதை கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் இந்நிகழ்வு தொடர்பாக ஓர் உயர்நிலை அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட 04.04.2023-ஆம் நாளிட்ட கடிதத்தின் மூலம் அரசிற்கு பரிந்துரை செய்துள்ளார்.
ஐஏஎஸ் அமுதா நியமனம்: திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரையினை ஏற்று. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில், தற்போது பணியிடை நீக்கத்தில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.பல்வீர்சிங், இ.கா.ப., மீதும் மற்ற காவல் துறையினர் மீதும் விசாரணைக் கைதிகளைத் துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாகவும், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாகவும் வரப்பெற்றுள்ள புகார்கள் குறித்தும், விரிவான விசாரணை மேற்கொள்ள திருமதி பெ. அமுதா, இ.ஆ.ப., அரசு முதன்மைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அவர்களை உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications