Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாதியால் நாறும் நாங்குநேரி.. கோயில், தண்ணீருக்கும் தடை! களமிறங்கிய விக்ரமன் - விசிக ஷாக் ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: தலித் மாணவனும் அவரது தங்கையும் வெட்டப்பட்ட நாங்குநேரிக்கு நேரில் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் விக்ரமன், பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில் அங்கு நிகழும் இதர சாதி கொடுமைகளை அம்பலப்படுத்தி இருக்கிறது அக்கட்சி.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விரிவான விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், "நாங்குனேரியில் தலைவிரித்தாடும் ஜாதிவெறி.. திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் பல்வேறு ஜாதியினரும் வசிக்கும் (தென்னிமலை, மறுகால்குறிச்சி, மஞ்சன்குளம், பட்டப்பிள்ளைபுதூர், நெடுங்குளம், நாங்குநேரி) ஊர்களுக்கு நடுவே சுமார் 150 பட்டியலின குடும்பங்களை கொண்ட பெருந்தெரு எனும் பகுதி அமைந்திருக்கிறது.

 VCK Vikraman went to Nanguneri and exposed the casteist activities

சுற்றியும் ஆதிக்க ஜாதியினர் பெரும்பான்மையாக சூழ இருக்கும் அங்கு தினமும் பதற்றம் தான். பொது விநியோக கடை, ஆரம்ப சுகாதார நிலையம், பேருந்து நிறுத்தம், தெப்பக்குளம் போன்ற அன்றாட தேவைகளுக்கு அப்பகுதி மக்கள் அந்த ஊர்களை கடந்து தான் போக வேண்டும்.

பெருந்தெருவுக்கு என இருக்கும் ஒரே ஒரு நீர்த்தேக்கத் தொட்டியிலும் (3000 லிட்டர்) அருகிலிருக்கும் சர்ச், பள்ளிக்கூடம் மற்றும் சில குடியிருப்புகளுக்கு நீர் பகிர்ந்தளிப்பதால் வாரமொருமுறை தான் குடிநீர் வரும். பட்டியல் ஜாதியினர் வசிக்கும் இங்கு மட்டும் கடும் குடிநீர் தட்டுப்பாடு.

 VCK Vikraman went to Nanguneri and exposed the casteist activities

அருகிலேயே இருக்கும் வானமாமலை பெருமாள் கோயிலுக்குள் இவர்களுக்கு அனுமதியில்லை. திருவிழாக்களில் பங்கேற்க அனுமதியில்லை. மீறி கலந்து கொண்டால் வெட்டு குத்து வன்முறை தான். தெப்பக்குளத்தை குளிப்பதற்கும் துணிகள் துவைப்பதற்கும் பெண்கள் பயன்படுத்தினால் ஆதிக்க ஜாதி பெண்கள் தாக்குகிறார்களாம். அதனால் அந்த குளமும் இவர்களின் பயன்பாட்டுக்கு இல்லை.

தினமும் பள்ளி, கல்லூரிக்கு போய் வரும் மாணவர்கள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்ற அச்சத்துடன் வசிக்கிறார்கள் தாய்மார்கள். இந்த பதற்றமான சூழலால் நாங்குனேரியில் வாழ்ந்து வந்த அய்யர்கள், பிள்ளைமார்கள் கூட பெருமளவில் அப்பகுதியை காலி செய்துவிட்டு வெளியேறியதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 VCK Vikraman went to Nanguneri and exposed the casteist activities

இப்படியான குரூரமான வரலாறு கொண்ட நாங்குனேரியில் தான் சின்னத்துரை(17) மற்றும் அவர் தங்கை(13) மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தாக்கியது ஜாதிவெறி தலைக்கேறிய ஆதிக்கஜாதி மாணவர்கள். சின்னத்துரைக்கு கப்பலில் பணி புரிய வேண்டும் என்ற லட்சியம்.

அவர் தங்கை சந்திராவிற்கு கலெக்டராக வேண்டுமாம். இது போன்ற பிஞ்சுகளின் கனவு நனவாக அந்த பகுதி வன்கொடுமை பகுதியாக அறிவிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் 24 மணிநேரமும் கண்காணிக்கும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஜாதிவெறி மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவதுடன் அவர்களின் பெற்றோர் மற்றும் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார் எனவும் கண்டறிந்து சட்டப்படி தண்டிக்க வேண்டும்.

அந்த தங்கை தன் உயிருக்கும் அஞ்சாது தன் அண்ணன் உயிரை காப்பாற்றியிருக்கிறாள். அதனால் அவளது இடதுகை மற்றும் வலது கை விரல்களில் வெட்டுக்காயங்கள். அவள் தடுத்திருக்காவிட்டால் சின்னத்துரை கழுத்தில் அரிவாள் இறங்கியிருக்கும். சின்னத்துரைக்கும் அவர் தங்கைக்கும் உயர்தர நவீன சிகிச்சையை அரசே அளிக்கவேண்டும்.

 VCK Vikraman went to Nanguneri and exposed the casteist activities

மேலும் அவர்களின் கல்விக்கான பொறுப்பை அரசே ஏற்க வேண்டும். அந்த பகுதியின் அத்தியாவசிய தேவைகளை உடனே பூர்த்தி செய்ய வழிவகை செய்யவேண்டும். கோயில் திருவிழாக்களில் பெருந்தெரு மக்கள் கலந்துகொள்ளுமாறு அரசு ஆவன செய்யவேண்டும். ஜாதிவெறி மாணவர்கள் ஒரு தேர்ந்த கூலிப்படை போல 2 அடி அரிவாளால் அந்த பிஞ்சுகள் மேல் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறித் தாக்குதலை பார்த்த அதிர்ச்சியில் 55 வயது நபர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்.

அவருக்கு இரண்டும் மகள்கள் ஒரு மகன். அந்த குடும்பம் தற்போது குடும்பத்தலைவரை இழந்துள்ளது. அவர்களுக்கு உரிய இழப்பீடும். பட்டதாரி மகளுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். இந்த விபரீதத்தை ஆரம்பத்திலிருந்தே மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளும் தமிழ்நாடு அரசு பெருந்தெரு மக்களின் பிரச்சனைகளை களைந்து சமத்துவத்தை நிச்சயம் நிலைநாட்டும் என நம்புவோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+