ஜனநாயகன்! சென்சார் விவகாரத்தில் ரசிகர்களை கொதி நிலையில் வைத்திருக்க விஜய் பில்டப்! அப்பாவு அட்டாக்
திருநெல்வேலி: ஜனநாயகன் படத்திற்கான சென்சார் விவகாரத்தில் விஜய் பில்டப் கொடுக்கிறார். மேலும் ரசிகர்களை கொதிநிலையிலேயே வைத்திருக்க இந்த பில்டப் செய்யப்படுகிறது என தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: ஜனநாயகன் கடைசி படம் என்பதால் சென்சார் விவகாரத்தில் விஜய் பில்டப் செய்கிறார். ரசிகர்களை கொதிநிலையில் வைத்திருக்க அவர் இது போன்ற பில்டப்பை கொடுத்து வருகிறார்.

ஆந்திராவில் படம் பார்க்கச் சென்ற பெண் இறந்த வழக்கில் நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் தவெக பொதுக் கூட்டத்தில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். சட்டம் தன் கடமையை செய்யும் என அப்பாவு தெரிவித்துள்ளார். கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 12 ஆம் தேதி ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், படத்திற்குத் தேவையான தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, திட்டமிட்டபடி நாளை வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. படத் தயாரிப்பு நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து, தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'ஜனநாயகன்' படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் குறித்த வழக்கில் வரும் 9 ஆம் தேதி (நாளை) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தது. நீதிபதி பி.டி. ஆஷா முன்பு இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவின்படி, படத்திற்கு எதிரான புகார் மனு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தணிக்கை வாரியம் சமர்ப்பித்தது.
தணிக்கை வாரியத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், "'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு எதிராக தணிக்கைக் குழு உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே, படம் மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது" என்று வாதிட்டார்.
இதற்கு நீதிபதி பி.டி. ஆஷா, "முதலில் படத்தை ஆய்வு செய்த குழுவில் இருந்த ஒரு உறுப்பினர், தனது கருத்து ஏற்கப்படவில்லை என்பதற்காக சர்ச்சைக்குரிய காட்சி இடம்பெற்றிருப்பதாகப் புகார் அளிப்பது எப்படி? இந்த புகார் ஏற்கத்தக்கதா? இந்த செயல்பாடு வினோதமாகவும், சந்தேகத்திற்குரியதாகவும் தோன்றுகிறது" என்று கேள்வி எழுப்பினார்.
நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், "படம் பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்களின் பரிந்துரை திருப்தியளிக்கவில்லையெனில், தணிக்கைச் சட்டத்தின்படி, மறுஆய்வுக் குழுவுக்கு படத்தை அனுப்ப தணிக்கை வாரியத் தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது" என்று விளக்கமளித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "'ஜனநாயகன்' படத்தில் பாதுகாப்புப் படைகளின் சின்னங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், அதுகுறித்து பாதுகாப்புத் துறை சார்ந்த நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டியது அவசியமாகிறது. தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதற்கு முன்போ அல்லது மறுஆய்வுக்குப் பரிந்துரைக்கும்போதோ, மனுதாரர் நீதிமன்றத்தை அணுக முடியாது" என்றார்.
"அனைத்து நடவடிக்கைகளும் சட்ட விதிமுறைகளின்படியே மிகத் தெளிவாக மேற்கொள்ளப்பட்டன. மறுஆய்வுக் குழுவுக்குப் பரிந்துரைத்த தகவல் மனுதாரருக்கு முறையாகத் தெரிவிக்கப்பட்டது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தணிக்கை வாரியத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த இயலாது" என்று ஏ.ஆர்.எல். சுந்தரேசன் வலியுறுத்தினார்.
"மத்திய அரசு அல்ல, தணிக்கை வாரியமே இந்த முடிவை எடுத்தது. சான்றிதழ் வழங்கும் வரை மறுஆய்வு செய்ய தணிக்கை வாரியத்திற்கு முழு அதிகாரம் உண்டு" என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் தனது வாதத்தில், "படத்தை முதலில் பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள் ஒருமனதாகச் சான்றளிக்க முடிவெடுத்த பின்னர், அதில் ஒரு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் மறுஆய்வுக்கு அனுப்பியதில் தீய உள்நோக்கத்துடன் செயல்பட்டதாகவே தோன்றுகிறது" என்று குற்றம்சாட்டினார்.
மேலும், "படத்தை ஆய்வு செய்த உறுப்பினர்கள் பரிந்துரை மட்டுமே வழங்க முடியுமே தவிர, புகார் அளிக்க முடியாது. தணிக்கை வாரியம் ஒருமுறை எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய இயலாது. ஒரு தணிக்கை வாரிய உறுப்பினரே புகார் அளித்த விஷயம் இப்போதே எங்களுக்குத் தெரியவந்தது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது" என்றும் அவர் நீதிபதியிடம் குறிப்பிட்டார்.
ஆகவே, மறுஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சதீஷ் பராசரன் தனது வாதத்தில் வலியுறுத்தினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், '''ஜனநாயகன்' திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தீர்ப்பை இன்றே அல்லது விரைந்து வழங்க வேண்டும்" என்று அவசர கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி, "உயர் நீதிமன்றத்தை நிர்பந்தம் செய்வதற்குப் பதிலாக, தணிக்கை வாரியத்தை நிர்பந்தம் செய்யுங்கள்" என்று கூறினார். எனினும், நாளை தீர்ப்பு வழங்க முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாததால், 'ஜனநாயகன்' படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்!











Click it and Unblock the Notifications