யார் இந்த ராபர்ட் புரூஸ்? குமரியில் இருந்து நெல்லையில் களமிறங்கும் காங்கிரஸ் வேட்பாளர்! என்ன காரணம்?
நெல்லை: காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் ராபர்ட் புரூஸ். வழக்கறிஞரான ராபர்ட் புரூஸ் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில், ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், அனைத்து கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

காங்கிரஸ் வேட்பாளர்கள்: தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் காங்கிரஸ் மட்டும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்து வந்தது. ஒருவழியாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 இடங்களில் 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, திருவள்ளூர் தொகுதிக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் முன்னாள் எம்எல்ஏ கே.கோபிநாத், கரூர் தொகுதியில் ஜோதிமணி, கடலூர் தொகுதியில் விஷ்ணு பிரசாத், சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
திருநெல்வேலி வேட்பாளர்: இந்நிலையில், மீதமுள்ள 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் தாரகை கட்பர்ட் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த ராபர்ட் புரூஸ்?: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராபர்ட் புரூஸ் (62) ஒரு வழக்கறிஞர். திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், காங்கிரஸ் கட்சியில் பல்வேறு கட்சிப் பதவிகளில் இருந்துள்ளார் ராபர்ட் புரூஸ். 2015ஆம் ஆண்டு முதல் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். நெல்லை தொகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ராபர்ட் புரூஸுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற உள்ள பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், நெல்லை தொகுதி வேட்பாளரே அறிவிக்கப்படாமல் இருந்ததால் பரபரப்பு நிலவி வந்தது. இந்நிலையில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராபர்ட் புரூஸ் நெல்லை தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
நெல்லை களத்தில் யார் யார்?: நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான்சி ராணியும், பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரனும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ராபர்ட் புரூஸ், நாம் தமிழர் கட்சி சார்பாக சத்யா ஆகியோர் களத்தில் உள்ளனர். இதில் நயினார் நாகேந்திரன் மட்டுமே நன்கு அறிமுகமான முகம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications