நட்ட நடு காட்டில் கணவர் சடலம்.. கிழிந்த ஆடைகளுடன் கூச்சல் போட்ட மனைவி.. மிரண்ட தென்காசி போலீஸார்

Subscribe to Oneindia Tamil

தென்காசி: சங்கரன்கோவில் அருகே கள்ளக்காதலனை ஏவிவிட்டு கணவரை கொன்ற மனைவி ஆடைகளை கிழித்துக் கொண்டு மர்ம கும்பல் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தது போல் நாடகத்தை நடத்தியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வென்றிலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வைரவசாமி மற்றும் முத்துமாரி தம்பதியர். கணவன் மனைவி இருவரும் வீரசிகாமணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிவதால் ஒரே இரு சக்கர வாகனத்தில் பணிபுரியும் இடத்திற்கு தினமும் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு இருவரும் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீரசிகாமணியில் இருந்து வென்றிலிங்கபுரத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

காரில் வந்த மர்ம நபர்கள்

காரில் வந்த மர்ம நபர்கள்

அப்போது அவ்வழியாக காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று வைரவசாமி - முத்துமாரி தம்பதியினரை வழி மறித்ததாக கூறப்படுகிறது. மேலும் காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் முத்துமாரி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 30 கிராம் நகைகளை பறித்ததாக கூறப்படுகிறது.

வழிபறி

வழிபறி

அப்போது வைரவசாமிக்கும் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம கும்பலுக்கும் கைகலப்பு ஏற்பட வைரவசாமி சரமாரியாக தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் காரில் வந்த மர்ம கும்பல் முத்துமாரியின் நகைகளுடன் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சேர்ந்தமரம் காவல்துறையினர் வைரவசாமியின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கிழிந்த ஆடைகள்

கிழிந்த ஆடைகள்

கிழிந்த ஆடைகளுடன் இருந்த முத்துமாரியை மீட்ட போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில் தனது கணவரை அடித்து போட்டுவிட்டு தன் மீது அந்த மர்ம கும்பல் பாலியல் பலாத்கார முயற்சி செய்ததாகவும் அவ்வழியே ஆட்கள் வருவதை அடுத்து தன்னை விட்டுவிட்டு தப்பியோடியதாகவும் முத்துமாரி தெரிவித்திருந்தார். இதையடுத்து காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் குறித்தும், கொலைக்கான பிண்ணனி குறித்தும் சேர்ந்தமரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 வழக்கு விசாரணை

வழக்கு விசாரணை

இந்த வழக்கு விசாரணையில் வைரவசாமியின் மனைவி முத்துமாரி மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக் தகவல்களை தெரிவித்தார். முத்துமாரி வைரவசாமியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே வீரசிகாமணி கிராமத்தை சேர்ந்த 29 வயதான இசக்கிமுத்துவை காதலித்து வந்ததாக தெரிகிறது.

உல்லாசம்

உல்லாசம்

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மனைவி முத்துமாரியின் கள்ளக்காதல் குறித்து வைரவசாமிக்கு தெரியவந்தது. இதனால் மனைவியை கண்டித்ததாக தெரிகிறது. எனினும் இதை முத்துமாரி கேட்காமல் இசக்கிமுத்துவுடனான காதலை தொடர்ந்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவனின் கண்டிப்பால் கோபமடைந்த முத்துமாரி, இசக்கிமுத்துவிடம் கணவரை தீர்த்து கட்ட ஐடியா கொடுத்துள்ளார்.

வழிமடக்கிய கள்ளக்காதலன்

வழிமடக்கிய கள்ளக்காதலன்

அப்போதுதான் தானும் கணவரும் வேலையை விட்டு இரவு நேரத்தில் தனியாக வரும் போது கொள்ளையர்களை போல் வந்து அவரை கொன்றுவிட்டு நகைகளை கொண்டு செல்ல முத்துமாரி கூறியுள்ளார். இதே போல் சம்பவத்தினத்தன்று முத்துமாரியும் வைரவசாமியும் பைக்கில் வந்து கொண்டிருந்த போது அவர்களை காளிதாஸ், அன்பு ராஜா ஆகியோருடன் வழிமடக்கிய இசக்கி முத்து, வைரவசாமியை பயங்கரமாக தாக்கியுள்ளார்.

மனைவி போட்ட பலே பிளான்

மனைவி போட்ட பலே பிளான்

இதில் வைரவசாமி மரணமடைந்ததை உறுதி செய்து கொண்டதை அடுத்து முத்துமாரி தன்னிடம் இருந்த நகைகளை கழற்றி இசக்கி முத்துவிடம் கொடுத்து தப்பியோட செய்துவிட்டார். பின்னர் தனது ஆடைகளை ஆங்காங்கே தானே கிழித்துக் கொண்டு தன் மீது பாலியல் பலாத்கார முயற்சி நடந்தது போல் சித்தரித்துள்ளார் முத்துமாரி. இதையடுத்து முத்துமாரியின் தகவலின்பேரில் இசக்கிமுத்து, காளிதாஸ், அன்பு ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+