கழுத்து நிறைய நகை.. லோ ஆங்கில் ரீல்ஸ்! காருக்குள் மசாஜ்.. நகைகளை ஆட்டையப் போட்ட யூடியூபர் மதுமிதா!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தன் வீட்டில் நகை பணம் இருப்பதாக கூறி ரீல்ஸ்போட்டு பிரபலமான யூடியூப் மதுமிதாவின் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேசுபொருளானது. இந்நிலையில் ஏற்கனவே மதுமிதா மீது பல்வேறு வழக்குகள் நிலைமையில் இருந்தது அம்பலமானது. தற்போது மற்றுமொரு அதிர்ச்சியாக காண்ட்ராக்டர் ஒருவரிடம் நகை பறித்ததாக யூடியூபர் மதுமிதா மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள நெல்லை போலீசார் ஒரிரு நாட்களில் சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்பத்துக்கோணம் அனந்தநாடார்குடி பகுதியை சேர்ந்தவர் மதுமிதா . பிரபல பெண் யூடியூபரான இவர் அடிக்கடி ஏராளமான நகைகளை அணிந்தவாறும், பணக்கட்டுகளை கைகளில் வைத்தவாறும் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.

YouTuber Madhumitha

வரது வீட்டில் கடந்த மாதம் சுமார் 118 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். துதொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 98 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

யூடியூபர் மதுமிதா

இதற்கிடையே, நெல்லை பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த காண்டிராக்டர் பேச்சிமுத்து என்பவர் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான மதுமிதா என்னிடம் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை நைசாக பறித்து சென்றதாக தெரிவித்து இருந்தார். இதனையடுத்து போலீசாா் அதனை ஜீரோ எப்.ஐ.ஆர். முறையில் பதிவு செய்து, அந்த வழக்கு பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

நகை திருட்டு புகார்

இதனைதொடர்ந்து நேற்று இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், புகார்தாரரான பேச்சிமுத்துவை காவல்நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினார். பின்னர் அவர் கூறிய தகவல்களை எழுத்து பூர்வமாக புகாராக பெற்றுக்கொண்டார். காண்டிராக்டர் பேச்சிமுத்து புகார் மனுவில் அளித்துள்ள விவரங்களாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- காண்டிராக்டர் பேச்சிமுத்துவுக்கு அடிக்கடி முதுகுவலி ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் அடிக்கடி பிசியோதெரபி சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது மதுமிதா அவருக்கு அறிமுகமாகி உள்ளார். பின்னர் இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி பழகி வந்துள்ளனர்.

காண்டிராக்டர் பேச்சிமுத்து

ஒருகட்டத்தில் மதுமிதா இரட்டை அர்த்தத்தில் பேசியதால் அவரிடம் பேசுவதை பேச்சிமுத்து தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு நெல்லை நீதிமன்றம் அருகே வந்த மதுமிதா அங்கிருந்தபடி பேச்சிமுத்துவுக்கு போன் செய்து அழைத்துள்ளார். அங்கு அவர் செல்லவே, 2 பேரும் தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் உள்ள பாளை கே.டி.சி. நகரை அடுத்த உத்தமபாண்டியன்குளம் விலக்கு பகுதிக்கு சென்றுள்ளனர்.

காரில் மசாஜ்

அங்கு பேச்சிமுத்துவுக்கு காரில் வைத்தே மதுமிதா மசாஜ் செய்துள்ளார். இதையடுத்து மசாஜ் செய்து முடித்தபின்னர் மதுமிதாவை புதிய பஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து பேச்சிமுத்து பஸ் ஏற்றி வைத்துள்ளார். தொடர்ந்து காரில் பேச்சிமுத்து புறப்பட்டபோது அவர் கழுத்தில் கிடந்த நகையை காணவில்லை என்றும், இதுகுறித்து மதுமிதாவிடம் கேட்டபோது, அவர் மிரட்டல் விடுத்து அசிங்கப்படுத்தி விடுவதாக கூறியதாகவும் பேச்சிமுத்து தெரிவித்துள்ளார்.

வழக்குப் பதிவு

மேலும் அதன் காரணமாகவே 4 ஆண்டுகளாக புகார் அளிக்கவில்லை எனவும், தற்போது மதுமிதா குறித்த தகவல்கள் வெளியாகியதால் புகார் அளித்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் அளித்த புகார் அடிப்படையில் பெண் யூடியூபர் மதுமிதா மீது பழைய இந்திய தண்டனை சட்டம் 379 பிரிவின் கீழ் அதாவது திருட்டு என இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து மதுமிதாவுக்கு ஓரிரு நாட்களில் சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+