பாகிஸ்தானை தாக்க ரெடியாகும் ஈரான்? ஹவுதி – சவுதி மோதலால் விரிவடையும் போர்!

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: மத்திய கிழக்கில் புதிதாக போர் மேகங்கள் சூழ தொடங்கி உள்ளன. சவுதி அரேபியாவிற்கு ஆதரவாக பாகிஸ்தான் தனது படை வீரர்களை அனுப்பி வைத்துள்ளதோடு, ஹவுதிகள் மீது தாக்குதல் நடத்த போர் விமானங்களை அனுப்பி வைத்துள்ளது. இதனால் கடும் கோபமான ஈரான், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்படும் என வார்னிங் கொடுத்துள்ளது. இதனால் ஹவுதி - சவுதி இடையேயான போர் விரிவடைய உள்ளதா? என்ற கேள்வி எழந்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் தொற்றி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சவுதி அரேபியா - ஏமன் ஹவுதிகள் இடையேயான மோதல் தான் இந்த ஹவுதிகள் ஈரான் ஆதரவில் செயல்பட்டு வருகின்றனர்.

Iran warns Pakistan

தற்போது இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக ஹவுதிகள், சவுதி அரேபியாவின் விமான நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் தற்போது வரை 18 பேர் இறந்துள்ளனர். இதற்கு பதிலடியாக ஹவுதிகளின் முகாம்களை குறிவைத்து சவுதி அரேபியா தாக்கி வருகிறது.

இந்த விவகாரத்தில் சவுதி அரேபியாவிற்கு ஆதரவாக பாகிஸ்தான், துருக்கி களமிறங்கி உள்ளன. 'மெக்கா' ஒப்பந்தப்படி இந்த 2 நாடுகளும் சவுதி அரேபியாவிற்கு பக்கப்பலமாக மாறி உள்ளன. 'மெக்கா' ஒப்பந்தம் என்பது சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி நாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி இந்த 3 நாட்டில் யார் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும் அதனை தங்கள் மீதான தாக்குதலாக கருதி பதிலடி கொடுக்கப்படும். படை வீரர்கள், போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்படும் என்பது தான்.

அதன்படி தற்போது துருக்கி ஆயுதங்கள், உளவுத்துறை தகவல்களை சவுதி அரேபியாவிற்கு வழங்கும் நிலையில் பாகிஸ்தான் இன்னும் ஒருபடி மேலே போய் ராணுவ வீரர்கள், போர் விமானங்களை சவுதியில் நிலைநிறுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் போர் விமானங்கள் ஹவுதிகள் மீது தாக்குதல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதனால் ஈரான் கடும் கோபமடைந்துள்ளது. ஏனென்றால் ஹவுதிகள் ஈரான் ஆதரவில் செயல்பட்டு வருகிறது. இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற ஈரான் தலைவர்கள் பாகிஸ்தானை விமர்சிக்க தொடங்கி உள்ளனர். இதுதொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடரபாளர் இஸ்மாயில் பாகாயிடம் கேள்வி கேட்கப்பட்டது. சவுதி அரேபியாவிற்கு பல்லாயிரக்கணக்கான பாகிஸ்தான் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதே? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு இஸ்மாயில் பாகாயி, ''நாங்களும் இந்த வதந்தியை கேள்விப்பட்டோம். அது உண்மையாக இருக்காது என்று நம்புகிறோம். ஏமன் விவகாரத்தில் எந்த தலையீடும் இந்த பிராந்தியத்தில் விருப்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை இங்குள்ள நாடுகள் அறுிந்து வைத்துள்ளன. 'மெக்கா' ஒப்பந்தம் போன்றவை முஸ்லிம் சமூகத்தின் நலன்களுக்கும், நல்வாழ்வுக்கும் எதிராக பயன்படுத்தப்படாது என நம்புகிறோம்'' என்றார்.

இதுபற்றி ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, நேரடியாக அந்த ஒப்பந்தத்தை குறிப்பிடாமல் விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி, ''அ்டை நாடுகள் தன்னிறைவு மற்றும் உண்மையான சகோதரத்துவத்தை கொண்ட கொள்கையை பின்பற்ற வேண்டும். இதுபோன்ற ஒப்பந்தங்கள் ஈரானைக் கட்டுப்படுத்தாது'' என சாடினார்.

இதுபற்றி ஈரானின் அரசு ஊடகமான தஸ்னிம் பாகிஸ்தான், துருக்கிக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வருகிறது. இதுதொடர்பாக அந்த ஊடகம், ''ஏமன் மக்களுக்கு எதிரான சவுதி அரேபியாவின் போரில் துருக்கியும், பாகிஸ்தானும் இணைகின்றன. இது இருநாடுகளின் நலன்களுக்கு நல்லது இல்லை.துருக்கியும், பாகிஸ்தானும், சவுதி அரேபியாவிற்கு ஆதரவாக ஏமன் மீது தாக்குதல் நடத்தினால் இருநாடுகளின் கப்பல்கள், அவர்களின் சொந்த நிலங்கள் தாக்குதலில் பாதிக்கப்படலாம் '' என்று வார்னிங் செய்துள்ளது. இந்த ஊடகம் ஈரானின் உள்ள இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையுடன் தொடர்புடையது என்பதால் ஈரான் தனது ஆயுதக்குழுவான ஹவுதிக்கு எதிராக சவுதி அரேபியாவிற்கு ஆதரவாக களமிறங்கிய பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த தயாராகிவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+