Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மாஸ்டர் ஸ்கெட்ச்".. ஒரே வீட்டுக்கு 2 சாவி.. திடீர்னு நுழைந்த அம்சவள்ளி.. ஜஸ்ட் 7 நாளில் போலீஸ் மாஸ்

பூந்தமல்லி பெண் கொலையில் கைதான நபர் வாக்குமூலம் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: கிட்டத்தட்ட ஒரு வார காலத்துக்கு பிறகு, பூந்தமல்லி பெண் கொலையில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். அது குறித்த தகவல்களையும் தெரிவித்துள்ளனர்.

பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அம்சவள்ளி.. 40 வயதாகிறது.. அதே பகுதியில், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்... இவரது மகள் சங்கீதா.. 18 வயதாகிறது..

கடந்த 4 வருடங்களாகவே கணவனை விட்டு தனியாக வசித்து வருகிறார் அம்சவள்ளி.. கணவரை விட்டு தனியே வந்துவிட்டதால், தன் மகளுக்கும் திருமணம் செய்து வைத்து, மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

 2 சாவிகள்

2 சாவிகள்

இதனால், தனியாக வசித்து வந்த அம்சவள்ளிக்கு ராஜு என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.. ராஜுவுக்கு 38 வயதாகிறது.. இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது... இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அம்சவள்ளி மகள் சங்கீதா, அம்மாவிடம் வந்து சேர்ந்துள்ளார்.. ஒரே வீட்டில் அம்மாவுடனேயே வசிக்க ஆரம்பித்துள்ளார்.. இவர்களின் வீட்டுக்கு 2 சாவிகள் இருந்துள்ளன.. ஒரு சாவி அம்சவள்ளியிடமும், இன்னொரு சாவி ராஜுவிடமும் இருந்துள்ளது.

 கொலுசு காணோம்

கொலுசு காணோம்

இந்த நிலையில் கடந்த வாரம், அம்சவள்ளி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு, நைட் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மகள் சடலமாக விழுந்து கிடந்ததை பார்த்து கதறி உள்ளார்.. அந்த பெண்ணின் கழுத்தை இறுக்கப்பட்டிருந்தது.. அவரது காலில் அணிந்திருந்த கொலுசு, மற்றும் காதில் கம்மல் காணாமல் போயிருந்தது.. இதையடுத்து, சங்கீதாவின் மரணம் தொடர்பாக உடனடியாக பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது...

 கள்ள உறவு

கள்ள உறவு

போலீசாரும் விரைந்து வந்து, சடலத்தை மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான், கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த அம்சவள்ளிக்கு, ராஜூவுடன் 4 வருட காலமாகவே உறவு இருப்பது தெரியவந்துள்ளது.. அதுமட்டுமல்ல, இத்தனை வருடமும் பிரிந்திருந்த நிலையில், நாடி வந்த மகள் சங்கீதாவுக்கு, அடுத்த மாதம் திருமணமும் நிச்சயித்து இருந்தார் அம்சவள்ளி.. சம்பவத்தன்று, அம்சவள்ளி வேலைக்கு சென்றுவிட்ட பிறகு, இன்னொரு சாவி வைத்திருந்த ராஜூ, வீட்டிற்குள் நுழைந்து சங்கீதாவின் கழுத்தை நெறித்துள்ளார்.

 கம்மல் ஜோடி

கம்மல் ஜோடி

அத்துடன் சடலத்தில் இருந்து கம்மல், கொலுசு, பணம் ஆகியவற்றையும் எடுத்து கொண்டு தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அம்சவள்ளியிடம் பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தியதுடன், தலைமறைவாக உள்ள ராஜுவையும் தேட துவங்கினர்.. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், ராஜூ அதற்குள் மும்பை தப்பி சென்றுவிட்டது தெரியவந்தது.. இதையடுத்து தனிப்படை போலீசார், கிட்டத்தட்ட ஒரு வார காலத்திற்கு பிறகு, மும்பை சென்று ராஜூவை கைது செய்துள்ளனர். போலீசார் தரப்பில் இதுகுறித்து சொல்லப்படுவதாவது:

கொலுசு

கொலுசு

ராஜு உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர்.. மும்பைக்கு ஒருமுறை வேலைக்கு சென்றபோது, அங்கு பழக்கமான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.. அவருக்கு ஒரு மகள், 2 மகன்கள் இருக்கிறார்கள்.. பிறகு, வேலை தேடி சென்னை வந்தபோது, இங்கே அம்சவள்ளியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. அதனால், மும்பைக்கு செல்லாமல், சென்னையிலேயே தங்கியிருக்க ஆரம்பித்துள்ளார்.. மும்பையில் நிறைய குற்ற செயல்களிலும் ராஜூ ஈடுபட்டுள்ளார்.. இவர் மீது நிறைய கேஸ்கள் உள்ளன..

 சங்கீதா கொலுசு

சங்கீதா கொலுசு

சம்பவத்தன்று சங்கீதாவை தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி இருக்கிறார்.. அதற்கு சங்கீதா மறுக்கவும், கழுத்தை நெறித்து கொன்றுள்ளார்.. நகைக்காக கொலை நடந்தது போல் இருக்க வேண்டும் என்பதற்காக, சங்கீதாவின் கொலுசு, கம்மலை எடுத்துக் கொண்டு மும்பைக்கு தப்பி விட்டார்.. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர். கைதான ராஜுவை, மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பிறகு பூந்தமல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள் போலீசார்.. கிட்டத்தட்ட ஒரு வார தேடுதல் வேட்டைக்கு பிறகு, இந்த கொலையில் குற்றவாளி கைதாகி உள்ளது, திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+