பில் கலெக்டர் கிளம்பிட்டாரு.. கூடவே டிரைவிங் லைசென்ஸ் தராத பூந்தமல்லி ஆர்டிஓ ஆபீசர்.. அட திருவள்ளூர்
திருவள்ளூர்: 9 வருடங்களுக்கு முன்பு லஞ்சம் வாங்கிய அதிகாரி ஒருவர், இன்று ஜெயிலுக்கு சென்றுள்ளார்.. இது சற்று காலதாமதமான தீர்ப்பு என்றாலும்கூட, தவறு செய்தவர்கள் ஒருபோதும் சட்டத்திலிருந்து முடியாது என்பதைத்தான், நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
தமிழகத்தில், பட்டா, பத்திரப்பதிவு போன்ற விவகாரங்களில் லஞ்ச நடமாட்டம் பெருகியபடியே வருகிறது.. இந்த மோசடிகளை, ஊழலை தடுப்பதற்காகவே தமிழக அரசு ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து, இதற்கெல்லாம் கடிவாளங்களை போட முயன்று கொண்டிருக்கிறது.

ஆனாலும், லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது.. அதிலும் பெண் அதிகாரிகளே, லஞ்சம் வாங்கி பொதுவெளியில் கைதாகி வருவது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. பத்திரப்பதிவு, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில், லஞ்சம் வாங்கி இவர்கள் கைதாவது மீடியாக்களில் வெட்டவெளிச்சமாக அம்பலமானாலும், அடுத்தடுத்த அதிகாரிகள் லஞ்சம் வாங்கத்தான் செய்கிறார்கள்.
நேற்றைய தினம் 2 முக்கிய அதிகாரிகள் இது தொடர்பான வழக்கில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.. சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர் ஆண்டிச்சிநகரை சேர்ந்தவர் ஷாஜூ.. 32 வயதாகிறது.. தொழிலதிபரான இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார்... அந்த வீட்டிற்கு சொத்து வரி நிர்ணயிக்க மாநகராட்சியின் 5வது வார்டு பில் கலெக்டர் ராஜா (53), ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்..
தான் பாடுபட்டு கட்டிய வீட்டிற்கு லஞ்சம் தருவதா? என்று மனம்புழுங்கிய ஷாஜூ, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரைப்படி, ரசாயன பவுடர் தடவிய ரூ.30 ஆயிரத்தை ஷாஜூ, அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்திற்கு சென்று பில் கலெக்டர் ராஜாவிடம் நேற்று வழங்கினார். அப்போது மப்ட்டியில் நின்றிருந்த போலீசார், ராஜாவை மடக்கிப்பிடித்தனர்.
அத்துடன், அந்த ஆபீசுக்கு வெளியில் நிறுத்தியிருந்த பைக்கில் சோதனை நடத்தியபோது, கணக்கில் வராத ரூ.1.40 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். இப்போது ராஜா ஜெயிலில் உள்ளார்.
அதேபோல, திருவள்ளூர் ஆர்டிஓ ஆபீசில் இன்னொரு அதிகாரி ஜெயிலுக்கு போயிருக்கிறார்.. ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த முரளி என்பவர், கடந்த 9 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய டிரைவிங லைசென்ஸை புதுப்பிக்க பூந்தமல்லி தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பத்திருக்கிறார்.. அவரது விண்ணப்பத்தை பரிசீலிக்க வட்டார போக்குவரத்து கண்காணிப்பாளர் கணபதி மற்றும் புரோக்கராக செயல்பட்ட பாலாஜி ஆகியோர் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
திருவள்ளூர் கோர்ட்: இந்த லஞ்ச பணத்தை பெற்றபோதுதான், கணபதி மற்றும் பாலாஜி இருவருமே கையும் களவுமாக போலீசில் சிக்கினார்கள்.. இது தொடர்பான வழக்கின் விசாரணை கடந்த 9 வருடங்களாகவே திருவள்ளூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை திருவள்ளுர் நீதிமன்ற முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி கே.மோகன் முன்பு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் அமுதா ஆஜராகி வாதிட்டார்.
சிறைத்தண்டனை: விசாரணை நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பளித்த நீதிபதி, வட்டார போக்குவரத்து கண்காணிப்பாளர் கணபதி, இடைத்தரகர் பாலாஜி இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.. வெறும் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு, உயர்ந்த பொறுப்பில் இருக்கும் அதிகாரி சிறைக்கு சென்றுள்ளது திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை: கடந்த வாரம் இதைவிட ஒரு பெரிய அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. சேலம் கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிபவர் சதாசிவம். இவர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் தொடர்பு கொண்டு தங்களது வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குச் சோதனைக்கு வருவதற்கு முன் தகவல் தெரிவித்தால் மாதம் 50 ஆயிரமும், முன்பணமாக 1 லட்சமும் பேரம் பேசினாராம்.
லஞ்சப்பணம் ரூபாய் ஒரு லட்சம் வைத்திருப்பதாகவும் இதனைச் சுங்கச்சாவடி அருகே உள்ள உணவகத்துக்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறும் டிஎஸ்பி கிருஷ்ணராஜனிடம் சொல்லியுள்ளார்.. இதனையடுத்து சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி கிருஷ்ணராஜன் சுங்க சாவடி அருகே உள்ள ஓட்டலுக்கு தனியே சென்றுள்ளார்..
அதிரடி கைது: அப்போது சதாசிவம் ரூபாய் 1 லட்சம் லஞ்சப் பணத்தை டிஎஸ்பி கிருஷ்ணராஜனிடம் வழங்கியதுமே, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி சதாசிவத்தை சுற்றிவளைத்து கைது செய்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கே லஞ்சம் தந்த இந்த விவகாரம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications