துணை மின் நிலையத்தில் பயங்கர தீ.. திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு! பரபர!
திருவள்ளூர்: திருவள்ளூர் தாமரைப்பாக்கம் அருகே துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். இதற்கிடையே மின்சாரம் தடைபட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே வாணியன் சத்திரம் பகுதியில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து அம்பத்தூர், செங்குன்றம், மணலி, மாதவரம் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் மழை பெய்து வந்த நிலையில், தற்போது மழை குறைந்து வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று காலை திடீரென துணை மின் நிலையத்தின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மின்வாரிய ஊழியர்கள், உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்தனர். எனினும் தீயை அணைக்க முடியாமல் அங்கிருந்த இயந்திரங்கள் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் கடும் புகைமூட்டம் சூழ்ந்தது.
இது குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மின் விநியோகத்தையும் நிறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த சென்னை அம்பத்தூர், செங்குன்றம், மணலி, மாதவரம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கமாக பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு பதிலாக, ரசாயன முறையில் இயந்திரங்களின் மீது பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட்டிருப்பதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த தீ விபத்து தொடர்பாக மின் வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிக வெப்பம் காரணமாக இயந்திரங்களில் தீப்பிடித்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தீ விபத்து காரணமாக அங்கு சேதமடைந்துள்ள இயந்திரங்கள் மாற்றப்பட்டு, விரைவில் மின் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications