நீலாங்கரை, பழவேற்காடு கடற்கரை.. கொத்து கொத்தாக திரண்ட ஆமைகள்.. ஆலிவ் ரிட்லி கழுத்தில் மர்ம அடையாளம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முதல் காட்டுப்பள்ளி வரை உள்ள வங்காள விரிகுடா கடற்கரை பகுதிகளில், அழிந்து வரும் இனமான ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள் கடந்த சில நாட்களாக அதிக எண்ணிக்கையில் இறந்து கரை ஒதுங்கி வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. இதற்கு என்ன காரணம்? அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்னென்ன? இங்கே சுருக்கமாக பார்ப்போம்..
ஆண்டுதோறும் டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலக்கட்டம் கடல் ஆமைகளின் இனப்பெருக்க காலமாகும்.. இந்த சமயத்தில் ஆழ்கடலில் வசிக்கும் ஆமைகள் முட்டையிடுவதற்காக கடற்கரையை நோக்கி வருவது வழக்கம்..

திருவள்ளூர் கடற்கரை
அப்படி வரும் ஆமைகள் இடும் முட்டைகளை வனத்துறையினர் பாதுகாப்பாகச் சேகரித்து, பொரிப்பகங்களில் வைத்து பராமரித்து, குஞ்சுகள் வெளிவந்தவுடன் அவற்றை மீண்டும் கடலில் விடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 14,000 முட்டைகள் சேகரிக்கப்பட்டு, அதில் 13,217 ஆமை குஞ்சுகள் வெற்றிகரமாகக் கடலில் விடப்பட்டன..
இருந்தாலும் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஆமைகளின் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது..
விசைப்படகுகள் ஆமை
கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் 30-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்த நிலையில், தற்போது பழவேற்காடு கலங்கரை விளக்கம் பின்புறம், லைட் ஹவுஸ் குப்பம், கூனங்குப்பம் மற்றும் முகத்துவாரப் பகுதிகளில் ஆமைகள் குவியல் குவியலாக இறந்து கிடக்கின்றன..
இந்தத் தொடர் உயிரிழப்புகள் குறித்து வனத்துறை மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. உயிரிழந்த ஆமைகளை மீட்டு, கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு வருகிறது.. ஆமைகள் கடற்கரைக்கு வரும்போது விசைப்படகுகளின் இயந்திரங்களில் சிக்கி உயிரிழக்கின்றனவா அல்லது கடலில் கலக்கும் ரசாயனக் கழிவுகள் காரணமா என்ற கோணத்தில் ஆய்வுகள் நடைபெறுகின்றன..
கடற்கரையில் ஆமைகள்
சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்துப்படி, சுற்றுலா பயணிகள் கடற்கரையில் வீசி செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள் கடல் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டு ஆமைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.. மேலும், மீனவர்களின் வலைகளில் சிக்கிக் கொள்ளும் ஆமைகள், சுவாசிப்பதற்காக நீரின் மேற்பரப்பிற்கு வர முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது..
குறிப்பாக, இழுவை வலைகளை பயன்படுத்தும் படகுகளில் ஆமைகள் தப்பிச் செல்வதற்கான டி.இ.டி (TED) எனப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்ற விதிமுறை எந்த அளவிற்குப் பின்பற்றப்படுகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது..
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்
பருவநிலை மாற்றம் மற்றும் கடல் சார் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் இந்த உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணங்களாக அடுக்கப்படுகின்றன.. அழிந்து வரும் நிலையில் உள்ள இந்த உயிரினங்களைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து மீனவர்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது..
வனத்துறை அதிகாரிகள் இது குறித்து சொல்லும்போது, போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் முடிவுகள் வந்த பிறகே ஆமைகளின் இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்றும், அதன் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்..
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications