பொருளாதார புலி மாதிரி.. ஜிஎஸ்டியை கொண்டு வந்து மக்களை கொடுமைப்படுத்தினார் மோடி.. ஸ்டாலின் அட்டாக்
திருவள்ளூர்: பெரிய பொருளாதார புலி மாதிரி நள்ளிரவில் ஜிஎஸ்டியை கொண்டுவந்து, தொழில் முனைவோரையும், மக்களையும் கொடுமைப்படுத்தினார் மோடி என்று தமிழக முதவ்லர் மு.க ஸ்டாலின் திருவள்ளூரில் பிரசாரத்தின் போது கூறினார்.
வரும் 19 ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. தமிழகம் உள்பட 22 மாநிலங்களில் முதற்கட்டமாக 102 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன.. அந்த வகையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று திருவள்ளூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீரசாமியை ஆதரித்து இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- திமுகவிற்கும் வட சென்னைக்குமான உறவு தாய்க்கும் சேய்க்குமான உறவு.
பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், பொது வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட அம்சங்கள் தான் பாஜக தேர்தல் அறிக்கையில் இருக்கிறது. பாஜகவின் தேர்தல் அறிக்கை நாட்டுக்கு வில்லன். ஆனால் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கை ஹீரோ ஆகும். பிரதமர் மோடி இரவுகளில் தான் சட்டம் கொண்டு வருவார். அப்படி திடீரென ஊழலை ஒழிக்க வந்த அவதார புருஷனாக டிவியில் தோன்றி பணமதிப்பிழப்பை அறிவித்தார்.
இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா அல்லது சர்வாதிகாரம் இருக்க வேண்டுமா?.. அம்பேத்கர் இயற்றிய சட்டம் இருக்க வேண்டுமா? அல்லது ஆர்எஸ்எஸ் ன் சட்டம் இருக்க வேண்டுமா?.. இதேபோல் இடஒதுக்கீடு வேண்டுமா? என்பதை தீர்மானிக்கப்போவது உங்களின் வாக்குதான்.
இதேபோன்று இன்னொரு நாள் இரவில் தோன்றி பெரிய பொருளாதார புலி போல ஜிஎஸ்டியை அமல்படுத்தி நடுத்தர மக்களை கொடுமைப்படுத்தினார். மாநில நிதியில் தான் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. ஒற்றை செங்கலோடு நிற்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்திற்கு ரூ.1960 கோடியா?.. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா












Click it and Unblock the Notifications