ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண நிகழ்ச்சி.. வாசலில் நிறுத்தப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ.. நடந்தது என்ன?
திருவள்ளூர்: ஏ.ஆர். ரஹ்மானின் மகள் திருமண வரவேற்பில் காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகருக்கு போலீஸ் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்ட போது, திமுக சட்டசபை உறுப்பினர்களுக்கு மட்டுமே காவல் துறை அனுமதி அளித்தது.
திமுக சட்டசபை உறுப்பினர்கள் உடன் வந்த பொன்னேரி தனி தொகுதி காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர் துரை சந்திரசேகருக்கு காவல் துறை அனுமதி மறுப்பு தெரிவித்தது.

வரவேற்பு நிகழ்ச்சி
அதனையடுத்து அவர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் அவரும் அவருடன் வந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் திரும்பிச் சென்றனர். நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. முன்னதாக முதல்வர் வருகையையொட்டி சாலைகளில் ஆங்காங்கே உள்ள பள்ளங்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக உடனடியாக சீரமைக்கப்பட்டு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

சத்தியவேடு சாலை
முதல்வர் வருகையால் கவரப்பேட்டை சத்தியவேடு சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள முன்னாள் அமைச்சர் கா.சுந்தரம் வீட்டில் அவரை நேரில் சந்தித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

உற்சாக வரவேற்பு
அப்போது அவரை கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர். கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் சாமி நாசர் டிஜே கோவிந்தராஜன் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர். கவரைபேட்டை அருகே உள்ள ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மூத்த மகள் கதிஜா ரஹ்மான் ரியாசுதீன் சேக் முகமது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் கலந்து கொண்டார்.

வரவேற்பு நிகழ்ச்சி
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அனுமதி கொடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் நிர்வாகிகள் வேதனையுடன் தெரிவித்தனர். ஏற்கெனவே திமுக காங்கிரஸ் கட்சியினரிடையே பனிப்போர் நிலவி வருகிறது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications