திருவள்ளூரில் கொட்டி தீர்க்கும் கனமழை.. நனைந்தபடி பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்!
திருவள்ளூர்: சென்னையை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. ஆனால் இம்மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்படாததால், மாணவர்கள் நனைந்தபடி பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் மேற்கு நோக்கி நகர்ந்திருப்பதால் மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை மழை பெய்து வருகிறது. மழையின் தீவிரம் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்தன.

ஆனால் விடுமுறை குறித்த கோரிக்கையை சென்னை மாவட்ட ஆட்சியர் நிராகரித்தார். சென்னையில் வழக்கம்போல பள்ளிகள் செயல்படும் என்று கூறியிருந்தார். ஆனால் நேரம் போக போக மழையின் தீவிரம் அதிகரித்திருந்ததால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என ஆட்சியர் அறிவித்தார். இதனால் பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் சற்று நிம்மதியடைந்தனர்.
ஆனால் திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இம்மாவட்டத்திலும் பள்ளிகளுக்காவது விடுமுறை விடப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. ஆனால் ஆட்சியர் விடுமுறை குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே மாணவர்கள் மழையில் நனைந்தபடி பள்ளிகளுக்கு சென்றுள்ளனர். சாலைகளில் மழைநீர் தேங்கியிருப்பதாலும், போக்குவரத்து நெரிசலாலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.
எனவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்திருக்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications