ஜெயந்தி புடவையெல்லாம் ரத்தம்.. பெற்ற தாயே.. பதறிப்போன அதிகாரிகள்.. திகிலாகிப் போன திருவள்ளூர்
பெண் சாமியார் பிள்ளைகளை நரபலி தர போவதாக வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது
திருவள்ளூர்: ஒரு பெண் பெற்ற பிள்ளைகளை நரபலி கொடுக்கப்போவதாக தகவல் வந்துள்ளது.. இதை கேட்டதுமே அதிகாரிகளுக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது.
Recommended Video

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்துள்ளது பொதட்டூர்பேட்டை.. இங்கு வசித்து வருபவர் ஜெயந்தி. 34 வயசாகிறது.. கல்யாணம் ஆகிவிட்டது.. 17 வயதில் 2 மகள்களும், 15 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள்.
ஜெயந்தி ஒரு பூசாரியாம்.. காளியை வழிபட்டு வருபவர்.. திடீர் திடீர் என சாமியாடுவாராம்.. அப்படி சாமி வந்துவிட்டால் குறி சொல்லுவார்..

குறி சொல்வார்
இந்த குறி சொல்வதில் ஒருசில விதிகளை கடைப்பிடித்து வந்துள்ளார்.. குறி சொல்வதானால், தன்னுடைய சொந்த கிராமமான புச்சிரெட்டிபள்ளிக்கு செல்வாராம் ஜெயந்தி. வாரத்தில் 3 நாள், அதாவது வெள்ளி, சனி, ஞாயிறு இங்குதான் வந்துவிடுவார்,. குறி சொல்லும்போது, திடீரென உயிருள்ள ஒரு கோழியின் தலையை நறுக்கென கடிப்பாராம்.. ஜெயந்தியிடம் குறிகேட்க அக்கம் பக்க கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வந்து போவார்கள்.

ஜெயந்தி
அப்படித்தான், கடந்த சனிக்கிழமை ஜெயந்தி சாமி ஆடினார்.. பிறகு குறி சொன்னார்.. தன்னுடைய வீட்டில் புதையல் இருப்பதாக அவரே அவருக்கு குறி சொல்லி உள்ளார்.. அதற்கு பிறகு சுயநினைவுக்கு வந்துள்ளார்.. உடனடியாக தன் வீட்டில் இருப்பதாக சொன்ன அந்த புதையல் மீது ஆசை வந்துள்ளது.. அந்த புதையலை எடுக்க வேண்டும் என்றால், பிள்ளைகளை உயிருடன் நரபலி தர வேண்டும் என்று முடிவெடுத்தார்.. 3 பிள்ளைகளையும் கொல்ல முடிவு செய்தார்.. இந்த தகவல்தான் காட்டுத்தீயாய் பரவி குழந்தைகள் நல அதிகாரிகளின் காதில் எட்டி உள்ளது.

விசாரணை
இதைக்கேட்டதும், அதிகாரிகள் ஜெயந்தி வீட்டுக்கு விரைந்து வந்தனர்.. விசாரணையும் ஆரம்பித்தனர்.. ஆனால், அப்படி ஒரு நரபலியும், பூஜையும் தான் செய்யவில்லை என்றும், யாரோ தவறான தகவலை தந்திருப்பதாகவும் அதிகாரிகளிடம் வாதிட்டுள்ளார்.. எனினும் அதிகாரிகள் ஜெயந்தியின் பேச்சை நம்பவில்லை.. வீட்டை சோதனை செய்தனர்.. அப்போது ஜெயந்தியின் டிரஸ்ஸில் ரத்தக்கறை இருப்பதையும் பார்த்தனர்..

கோழி தலை
அதை பற்றி கேட்டதற்கு சாமியாடும்போது கோழியின் கழுத்தை கடித்து ரத்தம் குடித்துவிட்டேன்.. அந்த கறை டிரஸ்ஸில் பட்டுவிட்டது என்று சொல்லி உள்ளார். ஆனால், எந்த நேரத்தில் ஜெயந்திக்கு சாமி வந்துவிட்டாலும், அது அவரது பெற்ற பிள்ளைகளுக்குதான் ஆபத்து நினைத்து, 3 பிள்ளைகளையும் அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.. ஜெயந்திக்கு மெடிக்கல் கவுன்சிலிங் தரவும் ஏற்பாடு செய்துள்ளனர். திருவள்ளூர் போலீசாருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படவும், விசாரணை நடந்து வருகிறது.

பணத்தாசை
இப்படித்தான் ஆந்திராவிலும் சில நாட்களுக்கு முன்பு நரபலி சம்பவம் நடந்தது.. பேராசிரியர்களான பெற்றோரே, தங்களது வயதுக்கு வந்த 2 பெண்களையும் நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. நம் ஊரிலும் இதுபோல அடிக்கடி நரபலிகள் தலைதூக்கவும் ஆரம்பித்துள்ளது.. 10 மாசம் கருவில் சுமந்து பெற்றோம் என்ற உணர்வினை, "பணத்தாசை" விழுங்கி விடுகிறது... மூடநம்பிக்கை கண்ணை மறைத்துவிடுகிறது..!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications