குளியலறையில் சந்தியா கிடந்த கோலத்தை கண்டு கதறிய பெற்றோர்.. விடிந்தால் திருமணம்.. திகைத்த திருவள்ளூர்
திருவள்ளுர்: ஒரு பெண்ணுக்கும் சரி, பெற்றோருக்கும் சரி திருமணம் என்பது மகிழ்ச்சியின் வடிவமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. அப்படித்தான் சந்தியாவும், அவரது பெற்றோரும் திருமண நாளுக்காக காத்திருந்தனர்.. தடபுடலான ஏற்பாடுகளையும் செய்து வந்தனர்.. பிறகு திருமணத்துக்கு முன்தினம் திடீரென இப்படியொரு கொடுமை நடந்து திருவள்ளூரில் மக்களை அதிர வைத்து வருகிறது. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் நடத்தி வருகிறார்கள்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. நகரி அடுத்துள்ளது சிந்தலபட்டை என்ற கிராமம்.. இங்கு வசித்து வரும் தம்பதி பாண்டுரங்கன் - வனிதா. இவர்களது மகள் சந்தியாவுக்கு 21 வயதாகிறது..

சந்தியா பி.காம். படித்துள்ளார். தற்போது இவர்கள் அனைவருமே திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் குடியிருந்து வருகிறார்கள்..
திருவள்ளூர் கல்யாண பெண்
இந்நிலையில், சந்தியாவிற்கும், பள்ளிப்பட்டு அருகே உள்ள அத்திமாஞ்சேரி பேட்டை, பாரதி நகரை சேர்ந்த மணி என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது.. அந்தவகையில் இன்றுதான் அதாவது வெள்ளிக்கிழமை, அத்திமாஞ்சேரி பேட்டை அடுத்த பலிஜகண்டிகை கிராமத்தில் இந்த திருமணம் தேதி குறிக்கப்பட்டது.
இதற்காக இரு குடும்பத்தினரும் திருமண ஏற்பாடுகளை ஜரூராக செய்து, பத்திரிகையையும் ஊர் முழுக்க தந்து வந்தனர்.. இன்று திருமணம் என்பதால், சந்தியா குடும்பத்தினர் நேற்ற முன்தினமே மணமகன் வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
இந்நிலையில் நேற்றைய தினம் சந்தியா குளிப்பதற்காக, குளியலறைக்கு சென்றிருக்கிறார். ஆனால், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.. இதனால் குடும்பத்தினர் குளியலறையை வெளியே நின்று கூப்பிட்டுள்ளார்கள்.. ஆனால் அந்த சத்தம் கேட்டும் எந்த பதிலும் உள்ளிருந்து வரவில்லை.
சந்தியா கிடந்த கோலம்
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது சந்தியா மயங்கி கீழே விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைப்பார்த்து பதறிப்போன உறவினர்கள் அவரை உடனடியாக சிகிச்சைக்காக அத்திமாஞ்சேரி பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி சென்றனர்..
அங்கு சந்தியாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு இரு வீட்டாரும் கதறி கதறி அழுதார்கள்.. உயரிழந்த சந்தியாவின் உடல் போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இதுகுறித்த விசாரணையையும் போலீசார் கையில் எடுத்துள்ளனர்.
மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்த பொதட்டூர்பேட்டை போலீசார் மணப்பெண் விஷம் குடித்து இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்..
அரசு போட்டித் தேர்வு
உயிரிழந்த சந்தியா நன்றாக படிக்கக்கூடியவராம். பொறியியல் படித்து முடித்த நிலையில், அரசு போட்டி தேர்வுக்காகவும் தயாராகி வந்தாராம்..
அதற்குள் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.. அவர்களின் வழக்கப்படி திருமணத்துக்கு ஒருநாளைக்கு முன்னதாகவே மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் மணமகனின் வீட்டில் தங்கியிருக்க வேண்டுமாம். அதன்படியே இவர்கள் மணமகன் வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்திருக்கிறார்கள். ஆனால், குளிக்க சென்ற சந்தியா எப்படி இறந்தார் என்றே தெரியவில்லையாம்..
சந்தியாவின் குடும்பத்தினர், தங்கள் பெண்ணுக்கு எந்தவொரு பிரச்சினையும் இருந்ததில்லை என்கிறார்கள்.. குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தாரா? ஏதேனும் விபரீத முடிவு எடுத்தாரா என்பதெல்லாம் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில்தான் தெரியவரும் என்கிறார்கள்.. 2 வீட்டாரும் மகிழ்ச்சியுடன் இருந்த தருணத்தில் நேரத்தில் இப்படியொரு துயர சம்பவம் நடந்துள்ளது அத்திமஞ்சேரிபேட்டை கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி விட்டது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications