மனைவியின் மாஸ்டர் ஸ்கெட்ச்.. இரவில் போலீஸ் டிரஸ்ஸில்.. கள்ளக்காதலன் வீட்டை தட்டிய திருவள்ளூர் பெண்
திருவள்ளூர்: பெண் ஒருவர் நள்ளிரவில், கள்ளக்காதலன் வீட்டு கதவை தட்டியதையடுத்து, அந்த பயங்கர சம்பவம் நடைபெற்றது.. திருவள்ளூர் மாவட்டமே இந்த பெண்ணால் கதிகலங்கி போயுள்ளது.. இது சம்பந்தமான விசாரணையையும் போலீசார் நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூரை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் பிரபல ரவுடியாவார்.. சரித்திர பதிவேடு குற்றவாளியும்கூட.. இவரது மனைவி பெயர் ரம்யா... ஒருமுறை ரவுடி லட்சுமணன் புழல் சிறையில் இருந்தபோது, தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்ற ரவுடியுடன் பழகியிருக்கிறார்.. இருவரும் சிறையிலேயே நட்பானார்கள்..

ரம்யா, விஷ்ணு: பிறகு சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும்கூட, 2 பேரும் நண்பர்களாக பழகிவந்தனர்.. இதனால், அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்ல ஆரம்பித்தார் விஷ்ணு.. ஒருகட்டத்தில், லட்சுமணனின் மனைவி ரம்யாவிற்கும், விஷ்ணுவிற்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுவிட்டதாக தெரிகிறது. இந்த விஷயம் லட்சுமணனுக்கு தெரிந்து கொந்தளித்து போயுள்ளார்.
இது தொடர்பாக நண்பர்களுக்குள் மனக்கசப்பு, விரோதம் ஏற்பட்டது.. இந்த விரோதத்தில் கடந்த 23ஆம் தேதி விஷ்ணு லட்சுமணனை நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டார்.. தற்போது இந்த கொலை வழக்கில் ரவுடி விஷ்ணு உட்பட 5 பேர் கைதாகி ஜெயிலில் உள்ளார்கள்.
போலீஸ் உடை: இதனிடையே, தன்னுடைய கணவரை கொலை செய்த, கள்ளக்காதலன் விஷ்ணு மீது ரம்யாவுக்கு ஆத்திரம் திரும்பியது.. எனவே, விஷ்ணுவை பழிவாங்கவும் முடிவு செய்தார். இதற்காக போலீஸ் உடையை அணிந்து கொண்டு, தோட்டக்காடு பகுதியிலுள்ள விஷ்ணுவின் வீட்டுக்கு நள்ளிரவில் கிளம்பி சென்றார்.. அப்போது தன்னுடைய மச்சினன்கள் அதாவது லட்சுமணனின் சகோதரர்களையும் துணைக்கு அழைத்து சென்றார்..
நேராக விஷ்ணுவின் வீட்டுக்கே சென்று கதவை தட்டினார் ரம்யா.. ஆனால், நள்ளிரவில் கதவை பலமாக தட்டியதால், வீட்டில் உள்ளவர்கள் பயந்துகொண்டு கதவை திறக்கவில்லை.. பிறகு ரம்யா, போலீஸ் ரம்யா வந்திருக்கிறேன்" என்றார்.
விஷ்ணு குடும்பத்தார்: இதைக்கேட்டதும் விஷ்ணுவின் அம்மா, தன்னுடைய மகனை பற்றிதான் விசாரிக்க போலீஸ் வந்திருக்கிறது என்று நினைத்து கொண்டு, கதவை திறந்துள்ளார்..

அப்பொழுது கையில் வீச்சரிவாளுடன் நின்றிருந்த ரம்யா, கதவை திறந்ததுமே விஷ்ணுவின் அம்மா, அப்பா, விஷ்ணுவின் மனைவி என 3 பேரையும் அரிவாளால் வெட்டினார்.. 3 பேருமே படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தனர்.. பிறகு 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்து, அங்கு அவர்களுக்கு சிகிச்சை நடக்கிறது.. இது தொடர்பாக மீஞ்சூர் போலீசார் ரம்யா உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் அதிர்ச்சி: பெண் ஒருவர் தன்னை போலீஸ் என கூறி, நள்ளிரவில் கூலிப்படையினருடன் சென்று 3 பேரை சரமாரியாக வெட்டிய சம்பவம் திருவள்ளூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications