திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர் யார்? தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு சொல்வதென்ன?
திருவள்ளூர்: திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர் அரசின் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றவர் அல்ல என தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. தவறான தகவல்களைப் பரப்புவது குற்றச்செயலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அருகே திருவேற்காட்டில் அமைந்துள்ளது ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம். பிரசித்திபெற்ற இந்த கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

கடந்த மாதம் தேவி கருமாரியம்மன் கருவறையில் உள்ள உற்சவர் கருமாரியம்மன் சிலையில் இருந்த 8 சவரன் மதிப்புள்ள தங்க நகை மற்றும் திருமாங்கல்யம் மாயமானது. இதனைக் கண்ட கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவில் நிர்வாகிகள் நடத்திய முதற்கட்ட விசாரணை கோவிலில் தினக்கூலியாக பணியாற்றும் அர்ச்சகர் சண்முகம் என்பவர் நகைகளை திருடி இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கோவில் பொறுப்பாளர் கனகசபரி அளித்த புகாரில், திருவேற்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் நகைகளை திருடி பின்னர் மீண்டும் அதை திரும்பவும் வைத்து விட்டதாக கூறினார்.
இதனிடையே, திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர், தமிழ்நாடு அரசின் பயிற்சிப் பள்ளியில் பயின்று தேர்வானவர் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. இந்த நிலையில், திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர், அரசின் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவர் அல்ல என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிக்கையில்; "வதந்தி: திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் அம்மன் நகையை அக்கோயிலின் தற்காலிக அர்ச்சகர் திருடி அடகு வைத்துள்ளார். இவர் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த பயிற்சிப் பட்டறையில் தேர்வானவர் என்று வதந்தி பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?: கருமாரியம்மன் கோயில் நகையைத் திருடிய தற்காலிக அர்ச்சகர், தமிழ்நாடு அரசின் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றவர் என்பது முற்றிலும் பொய்யானதாகும்.
இக்கோயிலில் தினக்கூலி அர்ச்சகராக பணியாற்றி வந்தவர், சண்முகம். தனது தந்தை சுப்பிரமணியன் ஐயரிடம் ஆகமப் பயிற்சி பெற்று அதன் அடிப்படையிலேயே பூஜை செய்யும் பணியினை மேற்கொண்டு வந்துள்ளார்.
சண்முகம் இக்கோயிலில் பணியாற்றிய போது அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 57 கிராம் தங்க செயினுடன் கூடிய திருமாங்கல்யத்தைத் திருடி அடகு வைத்துள்ளார். திருமாங்கல்யம் மீட்கப்பட்டு மீண்டும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது.
தினக்கூலி அர்ச்சகரான சண்முகம் மீது திருவேற்காடு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு 'முதல் தகவல் அறிக்கை' பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறான தகவல்களைப் பரப்புவது குற்றச்செயலாகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடி.. வினாத்தாளை மாற்றி கொடுத்த அதிகாரி.. சுற்றி வளைத்த அரசு ஊழியர்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications