வண்டை உயிருடன் விழுங்கிய 1 வயது குழந்தை! உள்ளே சென்று மூச்சுக்குழாயை கடித்ததால் விபரீதம்
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உயிருடன் இருந்த வண்டை பிடித்து விழுங்கி, அந்த வண்டு உள்ளே சென்று மூச்சுக்குழாயை கடித்ததால் குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தாமரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த 1 வயது பெண் குழந்தை குகஸ்ரீ. இவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு வண்டு இருந்தது.

அதை பிடித்து உயிருடன் வாயில் போட்டுக் கொண்டாராம். உள்ளே போட்டும் உயிருடன் இருந்த அந்த வண்டு, குழந்தையின் மூச்சுக்குழாயை கடித்தது. இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதனால் பதறிய பெற்றோர் குழந்தையை தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு ஓடினர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டது.












Click it and Unblock the Notifications