அதிமுகவுக்கு மாற்று தேமுதிகதான்.. தனித்து நிற்கவும் தயார்.. "41"க்கு ஆப்பு வைக்கும் விஜய பிரபாகரன்
திருவள்ளூர்: திமுக, அதிமுகவுக்கு ஒரே மாற்று தேமுதிகதான் என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் திருமண விழா ஒன்றில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார். அப்போது அவர் அங்கு பேசுகையில், சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்கு விஜயகாந்த் வருவார்.
தேர்தல் தேதி அறிவித்த பின்னரே கூட்டணி குறித்து கூற முடியும். இதனால் இப்போதைக்கு அவரவர் பணியை செய்து வருகிறோம்.

ஒரே கட்சி தேமுதிக
திமுக, அதிமுகவுக்கு மாற்றான ஒரே கட்சி தேமுதிகதான். கட்சி ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றாமல் ஓய மாட்டோம். சட்டசபையில் தேமுதிகவின் குரல் ஒலிக்கும். அத்திவரதர் போல் விஜயகாந்தும் எழுந்து வந்து புரட்சி நடத்துவார். அதிமுகவில் நிறைய குழப்பங்கள் இருக்கின்றன.

தனித்து போட்டி
சசிகலா பூரண குணமடைந்து தமிழகம் திரும்ப வேண்டும். கூட்டணியோடு போட்டியிடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். விஜயகாந்தை போல் ஊழலை ஒழிப்பேன் என எந்த தலைவராலும் கூற முடியாது. 2006 ஆம் ஆண்டே தேர்தலில் தனித்து போட்டியிட்டதால் தற்போது தனித்து நிற்கவும் பயமில்லை என்றார்.

விஜய பிரபாகரன்
அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே விஜய பிரபாகரன் அக்கட்சிக்கு மாற்று தேமுதிக என கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக அதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்த போதிலிருந்தே விஜய பிரபாகரன் பெரியவர்கள் மதிக்காமல் கண்டபடி பேசிவந்தார்.

விஜயகாந்த்
அவரை பிரேமலதாவும் விஜயகாந்தும் கண்டிக்கவே இல்லை. ஒரு கூட்டணியில் இருந்து கொண்டே அந்த கூட்டணி குறித்து அவதூறாக பேசுவது எந்த விதத்தில் நியாயம் என அதிமுக தொண்டர்கள் பொங்குகிறார்கள். மக்கள் ஆதரவு கிடைக்காததால்தான் தாங்கள் கூட்டணி அமைக்கிறோம், இல்லாவிட்டால் தனித்தே போட்டியிடுவோம் என்றும் விஜய பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார். மக்கள் ஆதரவு இல்லாத ஒரு கட்சி எப்படி 41 இடங்களை எதிர்பார்க்கிறது என அதிமுகவினர் கேள்வி எழுப்புகிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications