"வெறித்தனம்".. இவரெல்லாம் ஒரு புருஷனா?.. பூர்ணிமா தூங்கி கொண்டிருந்தபோது.. இந்த கொடுமையை பாருங்க..!

மனைவியை கத்தியால் குத்திய கணவனை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: விஜய் ரசிகை என்ற ஒரே காரணத்துக்காக, கணவனிடம் படாத பாடுபட்டுவிட்டார் பரிதாபத்துக்குரிய பெண்.. என்னதான் நடந்தது திருவள்ளூரில்?

திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வசித்து வந்தவர் ராஜேந்திரன். .. இவர் ஒரு போலீஸ்காரர்..

மனைவி பெயர் பூர்ணிமா.. கல்யாணம் ஆகி 15 வருடங்களாகிறது.. இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.. ஆனாலும் மனைவி மீது சந்தேகம் சந்தேகம் சந்தேகம்..

சந்தேகம்

சந்தேகம்

இத்தனைக்கும் பல பெண்களிடத்தில் தொடர்பு இருந்தது ராஜேந்திரனுக்குதான்.. இந்த விஷயம் தெரிந்து கோபப்பட்ட பூர்ணிமா, அதை தட்டிக் கேட்டுள்ளார்.. இதனால் பூர்ணிமா மீது கோபம் அதிகமாகி, அன்றுமுதல் வெறுப்பை கொட்டி வந்துள்ளார் ராஜேந்திரன்.. பல வகைகளில் பூர்ணிமாவை கொடுமைப்படுத்தியும் வந்துள்ளதாக தெரிகிறது.

 தகராறு - சந்தேகம்

தகராறு - சந்தேகம்

அதாவது, பூர்ணிமா டிவியில், சினிமா பார்க்க கூடாதாம்.. சீரியல் பார்க்க கூடாதாம்.. டிவியில் வெறும் கார்டூன் நிகழ்ச்சிதான் பார்க்க வேண்டுமாம்.. மனைவியை மட்டுமல்ல, 3 பிள்ளைகளையும் டிவி பார்க்ககூடாது என்று கண்டிஷன் போட்டு வைத்துள்ளார்.. வெளியில் யார்கிட்டயும் பேசக்கூடாதாம்.. போனில் பேசக்கூடாதாம்.. போன் வாங்கி தந்தால், யாருடனாவது பிள்ளைகள் பேசிவிடுவார்கள் என்பதாலேயே, ஊரடங்கு காலத்தில் நடத்தப்பட்ட ஆன்லைன் கிளாஸுக்குகூட போனை வாங்கி தரவில்லை..

பூர்ணிமா

பூர்ணிமா

அந்த பிள்ளைகளும் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளாமலேயே இருந்துவிட்டனர்.. இதனால் பிள்ளைகளின் படிப்பும் பாழாகிவிட்டதாக தெரிகிறது.. ஒருநாள் ராஜேந்திரன் வெளியில் சென்றிருந்த நேரம் பூர்ணிமா மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.. இவர் ஒரு விஜய் ரசிகை.. அதனால் அன்றைய தினம் டிவியில் விஜய் படம் பார்த்து கொண்டிருந்துள்ளார்.. அந்த நேரம் பார்த்து ராஜேந்திரன் டக்கென உள்ளே நுழைந்துள்ளார்.

 ராஜேந்திரன் பாஷா

ராஜேந்திரன் பாஷா

அவ்வளவுதான்.. மனைவியை விஜய்யுடன் தொடர்புபடுத்தி அசிங்க அசிங்கமாக பேசியிருக்கிறார்.. இதனால் பூர்ணிமா மிகவும் மனமுடைந்து போய் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.. இவர் அமர்க்களம் தாங்காமல், பூர்ணிமா 2 முறை தற்கொலைக்கு கூட முயன்றாராம்.. இந்நிலையில்தான், கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி புது பிரச்சனையை ராஜேந்திரன் ஆரம்பித்திருக்கிறார்.. ராஜேந்திரன் என்ற பெயரை "ராஜேந்திரன் பாஷா" என்று மாற்றிக் கொண்டு மனைவியிடம் வந்தார்.

 பூர்ணிமா

பூர்ணிமா

"உன்னை எனக்கு பிடிக்கல.. விவாகரத்து செய்ய போறேன்.. கையெழுத்து வேண்டும்" என்று கேட்டுள்ளார் ராஜேந்திரன்... 3 பெண் பிள்ளைகள் இருக்கும்போது, விவாகரத்தா? என்று கேட்ட பூர்ணிமா, அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் பூர்ணிமாவை சரமாரியாக தாக்கிவிட்டு வெளியே போய்விட்டார்.. பூர்ணிமாவும் அழுதுகொண்டே தூங்கிவிட்டார்.. சிறிது நேரம் கழித்து வெளியே சென்ற ராஜேந்திரன், கத்தியுடன் மறுபடியும் வீட்டுக்குள் நுழைந்தார்..

கத்திகுத்து

கத்திகுத்து

தூங்கிக்கொண்டிருந்த பூர்ணிமாவை எழுப்பி, அவரது வயிற்றிலேயே குத்தியுள்ளார்.. தடுக்க வந்த மகளையும் காலில் குத்திவிட்டு, ஓடிவிட்டார்.. பூர்ணிமாவும், மகளும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து அலறியுள்ளனர்.. அதற்கு பிறகு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. இதனிடையே கத்தியால் குத்திய ராஜேந்திரன், நேராக மீஞ்சூர் போலீஸ் ஸ்டேஷனுக்கே போய் சரணடைந்து விட்டார்..

போக்சோ

போக்சோ

இது தொடர்பாக சிகிச்சையில் இருக்கும் மூத்த மகளிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அம்மாவை கத்தியால் குத்தியதுடன், தன்னிடம் அப்பா தவறாக நடக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.. இதையடுத்து, அம்பத்தூர் மகளிர் போலீசாருக்கு இதை பற்றி புகார் சொல்லவும், அவர்கள் ராஜேந்திரனை போக்சோவில் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்... இந்த சம்பவம் திருவள்ளூரில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+