கணவனை தூக்கில் தொங்கவிட்ட "ஒத்த ரோசா.." விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்
காயத்ரி பணியாற்றிய மருத்துவமனையில் அவரது முன்னாள் காதலனும் பணியாற்றியுள்ளார்.
திருவள்ளூர்: முன்னாள் காதலனை மீண்டும் கரம்பிடிக்க கணவனை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய நர்ஸ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆர்.கே.பேட்டையை சேர்ந்தவர் யுவராஜ்(29). இவர் மண்ணூர்பேட்டையில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் பெண் தேடி வந்துள்ளனர். இவரது உறவினர் பெண்ணான காயத்ரி என்பவர் திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார்.
காயத்ரியின் பெற்றோரும் வரன் தேடிய நிலையில் இருவருக்கும் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இதன் பின்னர் வாழ்க்கை சாதாரணமாக நகர்ந்துள்ள நிலையில், காயத்ரி வேலை செய்த மருத்துவமனையில் அவரது முன்னாள் காதலர் சீனிவாசன் பணிக்கு சேர்ந்திருக்கிறார். இதனையடுத்து மீண்டும் இவர்களிடையே நட்பு மலர்ந்திருக்கிறது. இந்த நட்பு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து காதலாக பரிணமித்திருக்கிறது.

காதல்
தனது மனைவி அடிக்கடி யாருடனோ நீண்ட நேரம் போன் பேசுவதை பார்த்து சந்தேகமடைந்த கணவர் யுவராஜ் இது குறித்து காயத்ரியிடம் விசாரித்துள்ளார். ஆனால் காயத்ரி எதையும் வெளிப்படையாக கூறவில்லை. எனவே யுவராஜுக்கு சந்தேகம் தீவிரமடைந்துள்ளது. மனைவி காயத்ரிக்கு தெரியாமல் அவருடைய செல்போனை எடுத்து சோதித்து பார்த்ததில் காயத்ரி, சீனிவாசன் எனும் நபருடன் நீண்ட நேரம் பேசியிருப்பது கண்டுபிடித்துள்ளார். பின்னர் விசாரணை மேற்கொண்டதில் காயத்ரியின் முன்னாள் காதலன்தான் சீனிவாசன் என்பது தெரியவந்தது.

நண்பர்கள்
இது தொடர்பாக காயத்ரியிடம் சண்டை போட்ட யுவராஜ், வேலைக்கு போக விடாமல் வீட்டிலேயே குழந்தையை பராமரித்துக் கொண்டு இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். காயத்ரி வேலைக்கு போகாததால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை பெரிதாக வெடித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காயத்ரி, தனது கணவன் யுவராஜை பழி தீர்க்க முடிவெடுத்துள்ளார். எனவே தனது காதலன் சீனிவாசன் மற்றும் அவருடைய நண்பர்கள் 2 பேரையும் 21ம் தேதி நள்ளிரவு இரவு வீட்டிற்கு அழைத்திருக்கிறார். அப்போது யுவராஜ் அசந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில், கொலை நிகழ்ந்துள்ளது.

கொலை
சீனிவாசனின் நண்பர்கள் யுவராஜின் காலை பிடித்துக் கொள்ள சீனிவாசனும் காயத்ரியும் சேர்ந்து யுவராஜனின் கழுத்தை நெரித்துள்ளனர். இதில் யுவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் யுவராஜை தூக்கில் தொங்கவிட்டு யாருக்கும் தெரியாமல் சீனிவாசனும் அவரது நண்பர்களும் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளனர். 22ம் தேதி காலையில் காயத்ரி தனது கணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என அக்கம் பக்கத்தினரை கூப்பிட்டு அழுதுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை
பரிசோதனை முடிவில் யுவராஜ் தூக்கிட்டு இறக்கவில்லையென்றும், மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் காயத்ரியிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். காயத்ரி விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது காதலன் சீனிவாசன், அவருடைய நண்பர்கள் மணிகண்டன் மற்றும் ஹேமநாத் என்கிற ஜில்லு ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். முன்னாள் காதலனுடன் மீண்டும் சேர கணவரை நர்ஸ் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications