கள்ளக்காதலியுடன் கணவர் கொலை மிரட்டல்.. பல பெண்களுடன் தொடர்பு.. ஆபாச வீடியோக்கள்! மனைவி புகார்
திருவள்ளூர்: திருமழிசை பகுதியில் கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வசித்து வரும் தன்னையும் தனது பெற்றோரையும் கணவர் அவரது கள்ளக்காதலியுடன் சதித்திட்டம் தீட்டுவதாகவும் ஆதாரங்களுடன் புகார் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பகுதியில் திவ்யா. இவருக்கு இரண்டு குழந்தைகள். கணவருடன் பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர் 27-ஆம் தேதி சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் எனக்கும் என் உறவினரான மவுலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த முத்துவுக்கும் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 12 வயதில் ஒரு மகளும் 2 வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில் 2019 ஆம் ஆண்டு தன் கணவருக்கு பல பெண்களுடன் தவறான பழக்கம் இருப்பது தெரியவந்தது.

பணத்தை திருப்பி தராதவர்கள்
அப்பகுதியை சேர்ந்த ஒரு சிலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து அந்த பணத்தை திருப்பித் தர முடியாத பெண்களை படுக்கைக்கு அழைத்துள்ளார். இவ்வாறு படுக்கைக்குச் செல்லும் பெண்களுடன் தனிமையில் இருப்பதை வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறார்.

காவல்நிலையம்
இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போது நான் பார்த்து கண்டித்து ஏஞ்சல் குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தேன். இதுகுறித்து கணவரிடம் கேட்ட போது எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் என்னையும் என் பெற்றோரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார்.

வாழ்க்கை
இது போன்று பல பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் கணவர் மீதும் கள்ளக்காதலி ஏஞ்சல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நாங்கள் ஒன்றாக வாழ்ந்த போது திருமணத்தின் போது போடப்பட்ட நகைகளை அடகு வைத்து புதுப்பேட்டையில் ஆட்டோமொபைல் கடை நடத்தி வந்த நிலையில் அந்த கடையை கணவர் அபகரித்துவிட்டார்.

வாழ்வாதாரம்
இதனால் எனது குழந்தைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. புதுப்பேட்டை பகுதியில் உள்ள அந்த கடையை மீட்டுத்தரக் கோரியும் மேலும் தன் கணவரின் சகோதரர் செல்வம், அவரது அண்ணி விசாலாட்சி மற்றும் தாய் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

சொத்து
இதுகுறித்து முத்துவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் சொத்து மொத்தத்தையும் எழுதி தரக் கோரி திவ்யா என்னை காரில் ஆட்களை வைத்து கடத்தி அடித்து சித்ரவதை செய்தார். இதுகுறித்து அவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. திவ்யா சொல்வது அனைத்தும் பொய். தன் மீது சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
-
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications