பிரியாணிக்காக.. மகாலட்சுமி மகன் காது குத்து விழாவில் மோதல்.. மாடு வெட்டும் கத்தியால் சரமாரி குத்து
திருவண்ணாமலை: ஒரு பார்சல் பிரியாணி கேட்டார் ஏழுமலை.. அதை தந்திருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை.. இந்த விவகாரம் பூதாகரமாகி கடைசியில் காதுகுத்து விழா, கத்திகுத்து வரை சென்றுவிட்டது!
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை அடுத்துள்ள கிராமம் செல்லங்குப்பம்.. இங்கு புது காலனியில் வசித்து வரும் தம்பதி கோவிந்தன் - மகாலட்சுமி.. மகாலட்சுமிக்கு 32 வயதாகிறது.. இவருடைய குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

காதுகுத்து என்பதால் கிடா வைத்து பிரியாணி விருந்து வைத்தனர்... அப்போது அதே ஊரைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் விருந்துக்கு வந்தார்.. தனக்கு பிரியாணி பார்சல் வேண்டும் என்று மகாலட்சுமியின் சொந்தக்காரர் சுகுமாரிடம் தகராறு செய்தார்... ஆனால் பிரியாணி தரவில்லை... இதனால் சுகுமார் வாக்குவாதம் செய்யவும், அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அவரை அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் விழாவில் பிரியாணி கேட்ட ஏழுமலையிடம் நியாயம் கேட்க மகாலட்சுமியின் உறவினர் பாஸ்கர் உள்ளிட்ட சிலர் சென்றனர்... அப்போது திரும்பவும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது... இதனால் அதே ஊரை சேர்ந்த பாஸ்கர் என்பவர் அவர்களை சமாதானம் செய்ய முன்வந்தார்.
அப்போது ஏழுமலை பாஸ்கரிடம் "நீ யார் நடுவில் பஞ்சாயத்து பண்ண?" என்று கேட்டுள்ளார்.. இது பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது.. ஒரு கட்டத்தில், பாஸ்கரை ஏழுமலை கீழே தள்ளி அடித்து உதைத்தார்.. அப்போதும் ஆத்திரம் அடங்காமல், மாடு வெட்டும் கத்தியால் வயிறு, நெற்றியில் சரமாரி குத்தினார்... இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த பாஸ்கரை உறவினர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து வேட்டவலம் போலீசில் மகாலட்சுமி புகார் தரவும், அதன்படி விசாரணையும் நடந்து வருகிறது.. ஒரு பிரியாணி பார்சல் கேட்க போய்.. கடைசியில் கத்திக்குத்து வரை நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications